பொது செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு துறை அழைப்பு; சார் - பதிவாளர்கள் திகைப்பு

Added : அக் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை--விழிப்பு பணி வாரத்தை முன்னிட்டு, ஆன்லைன் நிகழ்ச்சியில் பங்கேற்க, பதிவுத்துறை அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அழைப்பு விடுத்து உள்ளது. தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகளுக்காக, 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் ஒவ்வொரு பணிக்கும், ஏதாவது ஒரு வகையில் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. இதனால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இரண்டு

சென்னை--விழிப்பு பணி வாரத்தை முன்னிட்டு, ஆன்லைன் நிகழ்ச்சியில் பங்கேற்க, பதிவுத்துறை அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அழைப்பு விடுத்து உள்ளது.

தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகளுக்காக, 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் ஒவ்வொரு பணிக்கும், ஏதாவது ஒரு வகையில் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. இதனால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இரண்டு ஆண்டுகளாக சார் - பதிவாளர் அலுவலகங்களில், அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். இதில், பல இடங்களில் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சில இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, அக்., 27 முதல், நவம்பர், 2 வரை அரசு அலுவலகங்களில், லஞ்சத்துக்கு எதிராக விழிப்பு பணி வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, ஆன்லைன் முறையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது.இதில் பங்கேற்க, பதிவு அதிகாரிகளை அனுப்புமாறு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், பதிவுத்துறை தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதையேற்று, நிகழ்ச்சிக்கு செல்வதா, வேண்டாமா என பதிவுத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
11-அக்-202108:48:02 IST Report Abuse
R.RAMACHANDRAN லஞ்சம் வாங்குபவர்கள் சொட்பொழிவு நடத்தினால் லஞ்சம் ஒழிந்துவிடுமா இந்நாட்டில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X