பொது செய்தி

தமிழ்நாடு

நகை கடன்: விதிமுறை வெளியிட கோரிக்கை

Added : அக் 10, 2021
Share
Advertisement
சென்னை-தங்க நகை கடன் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வெளியிடுமாறு, கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்கள், கூட்டுறவு துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, பணியாளர்கள் கூறியதாவது:பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தங்க நகைகளை அடமானமாக பெற்று கடன் வழங்குகின்றன. குறைந்த வட்டி வசூலிக்கப்படுவதால், பலரும் கூட்டுறவு

சென்னை-தங்க நகை கடன் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வெளியிடுமாறு, கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்கள், கூட்டுறவு துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பணியாளர்கள் கூறியதாவது:பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தங்க நகைகளை அடமானமாக பெற்று கடன் வழங்குகின்றன. குறைந்த வட்டி வசூலிக்கப்படுவதால், பலரும் கூட்டுறவு நிறுவனங்களில் கடன் வாங்குகின்றனர்.தனிநபருக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை கடன் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினராக இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும், கடன் கொடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

கூட்டுறவு சங்க தலைவர், துணை தலைவர்களாக உள்ள கட்சியினர், தனிநபர் உச்சவரம்பை தாண்டி கடன் வழங்க நிர்ப்பந்தம் செய்கின்றனர்.இதற்கு முன், 'ஆதார்' எண் வாங்கி தான் கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் ஊழியர்களிடம் கூறப்படவில்லை.கடன் வழங்கும் போது, அந்த தொகைக்கு இணையான தங்கம் அடமானமாக பெறப்படுகிறது.

தற்போது திடீரென, ஒரே நபருக்கு அதிக கடன் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே, எதன் அடிப்படையில் கடன் வழங்க வேண்டும்; என்னென்ன வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பான விதிகளை, கூட்டுறவு துறை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X