பொது செய்தி

தமிழ்நாடு

சத்தீஸ்கர் முதல்வரிடம் ஸ்டாலின் கடிதம் அளிப்பு

Added : அக் 10, 2021
Share
Advertisement
சென்னை: கல்வித் துறையை நிர்வகிப்பதில், மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம், சத்தீஸ்கர் மாநில முதல்வரிடம் நேற்று அளிக்கப்பட்டது. 'நீட்' தேர்வை ரத்து செய்தல் மட்டுமின்றி, கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க ஆதரவு வேண்டும் என 12 மாநில முதல்வர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் கடிதம்

சென்னை: கல்வித் துறையை நிர்வகிப்பதில், மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம், சத்தீஸ்கர் மாநில முதல்வரிடம் நேற்று அளிக்கப்பட்டது.

'நீட்' தேர்வை ரத்து செய்தல் மட்டுமின்றி, கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க ஆதரவு வேண்டும் என 12 மாநில முதல்வர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை, 12 மாநில முதல்வர்களை சந்தித்து நேரில் வழங்க எம்.பி.,க்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனை, தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் சமீபத்தில் சந்தித்து, இந்தக் கடிதத்தை வழங்கினார். இதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலை, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவா நேற்று சந்தித்து, ஸ்டாலினின் கடிதத்தை வழங்கினார். இந்த சந்திப்பு, டில்லியில் உள்ள சத்தீஸ்கர் சதன் வளாகத்தில் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X