பொது செய்தி

தமிழ்நாடு

கவிஞர் பால ரமணி காலமானார்

Added : அக் 10, 2021
Share
Advertisement
சென்னை--கவிஞரும், சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான பால ரமணி, 62, சென்னையில் நேற்று காலமானார். எழுத்தாளர், கவிஞர், மேடை பேச்சாளர், சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்ற பன்முகம் உடையவர் பால ரமணி. இவர் கடலுார் மாவட்டம், சிதம்பரம் ஒன்றியம் கீழ மூங்கிலடி என்ற கிராமத்தில் பிறந்தவர். டில்லி அகில இந்திய வானொலி நிலையம்,

சென்னை--கவிஞரும், சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான பால ரமணி, 62, சென்னையில் நேற்று காலமானார்.

எழுத்தாளர், கவிஞர், மேடை பேச்சாளர், சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்ற பன்முகம் உடையவர் பால ரமணி. இவர் கடலுார் மாவட்டம், சிதம்பரம் ஒன்றியம் கீழ மூங்கிலடி என்ற கிராமத்தில் பிறந்தவர். டில்லி அகில இந்திய வானொலி நிலையம், நாக்பூர், புதுச்சேரி மற்றும் சென்னை தொலைக்காட்சி நிலையங்களில் பணியாற்றியவர். இவர் கம்ப ராமாயணம் குறித்து ஆய்வுகள் செய்து, சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்; நுால்களையும் எழுதி உள்ளார். இதற்காக, தமிழக அரசின் கம்பர் விருது, கலைமாமணி விருதுகளை பெற்றுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை காலமானார்.

அவரின் உடல் சென்னை அண்ணாநகர் மயானத்தில், நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. பாலரமணியின் உடலுக்கு, தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். கவிஞர் பாலரமணி, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இது குறித்த, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் முகநுால் பதிவு: என் நேச கணவர், என் காதல் கணவர், என்னவர் காலமாக உறைந்து நிற்கிறார். பேச நினைத்ததும், வெல்ல நினைத்ததும், ஏதும் தெரியாமல், என் உயிரின் கதகதப்பை பறி கொடுத்து, வாழ்வின் வெப்பத்தில் இனி நானும், என் குழந்தைகளும்...தெய்வங்கள் எல்லாம் மரணித்துப் போகக் கடவது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X