பொது செய்தி

தமிழ்நாடு

காகிதத்தில் கொலு பொம்மை: 82 வயது மூதாட்டி அசத்தல்

Updated : அக் 11, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தர்மபுரி:தர்மபுரியில், காகிதத்தில் கொலு பொம்மைகள் செய்து, 82 வயது மூதாட்டி அசத்தியுள்ளார்.தர்மபுரி, அப்பாவு நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ராமசாமி. இவரது மனைவி மங்களா, 82; பல ஆண்டுகளாக நவராத்திரியின்போது, பலவித கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்து வந்தார்.கொரோனா பரவலால் வீட்டிலுள்ள நாளிதழ்கள், பழைய காகிதங்களை கொண்டு வீடு, ரங்கராட்டினம், காய்கறி, பழங்கள், வீட்டு உபயோக
காகிதத்தில் கொலு பொம்மை:  82 வயது மூதாட்டி அசத்தல்

தர்மபுரி:தர்மபுரியில், காகிதத்தில் கொலு பொம்மைகள் செய்து, 82 வயது மூதாட்டி அசத்தியுள்ளார்.தர்மபுரி, அப்பாவு நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ராமசாமி. இவரது மனைவி மங்களா, 82; பல ஆண்டுகளாக நவராத்திரியின்போது, பலவித கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்து வந்தார்.

கொரோனா பரவலால் வீட்டிலுள்ள நாளிதழ்கள், பழைய காகிதங்களை கொண்டு வீடு, ரங்கராட்டினம், காய்கறி, பழங்கள், வீட்டு உபயோக பொருட்கள், மனித வடிவ பொம்மைகளை உருவாக்கி வர்ணம் பூசி, கொலு வைத்து அசத்தியுள்ளார்.மங்களா கூறியதாவது:பண்டிகை கொண்டாட்டங்களில் நவராத்திரி விழாவும் ஒன்று. கடந்தாண்டு கொரோனாவால், நவராத்திரி கொலுவில் வித்தியாசமான பொம்மைகள் வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தாண்டு கொலுவில், காகிதத்தில் கொலு பொம்மைகள் செய்தேன்.இதற்காக மூன்று மாதங்களாக காகிதம், நாளிதழ்கள் மூலம் வீடு, மாட்டுவண்டி, ரங்கராட்டினம், காய்கறி, பழங்கள், மாட்டு வண்டி, தள்ளுவண்டி கடை, சலவை கடை, துணிக்கடை உள்ளிட்டவற்றை தயாரித்து கொலுவில் வைத்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,யூ.எஸ்.ஏ
12-அக்-202118:14:36 IST Report Abuse
vns வயது மூதாட்டி இதுபோன்ற வார்த்தைகளை தவிர்க்கலாமே.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
11-அக்-202119:26:11 IST Report Abuse
Vena Suna தெய்வங்கள் உஎதுவுமே இல்லை.இது ஒரு திறமை.பாராட்டுக்கள். ஆனால் நவராத்திரியோடு சேர்க்க முடியாது. வைக்கும் பார்க்கில் சேர்க்கலாம்.
Rate this:
Cancel
mei - கடற்கரை நகரம்,மயோட்
11-அக்-202119:25:58 IST Report Abuse
mei சூப்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X