பொது செய்தி

தமிழ்நாடு

வெண் புள்ளிகள் நோய் அல்ல: விழிப்புணர்வு முகாமில் தகவல்

Added : அக் 10, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:" உடலில் உருவாகும், வெண் புள்ளிகள் நோய் அல்ல; தோல் நிற மாற்றம்" என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.மேட்டுப்பாளையத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ரோட்டரி கிளப் ஆப் மேட்டுப்பாளையம் பிரைம் சங்கம், வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை நடந்தது.நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட

மேட்டுப்பாளையம்:" உடலில் உருவாகும், வெண் புள்ளிகள் நோய் அல்ல; தோல் நிற மாற்றம்" என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.மேட்டுப்பாளையத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ரோட்டரி கிளப் ஆப் மேட்டுப்பாளையம் பிரைம் சங்கம், வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை நடந்தது.நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ரமணி தலைமை வகித்தார்.

இந்திய வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்க செயலாளர் உமாபதி பேசியதாவது:உடலில், வெண்புள்ளி, எந்த வயதிலும் வரும். இவர்கள் வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; சென்றால் உடலில் கொப்புளம் ஏற்படும்.வெண்புள்ளி நோய் அல்ல. அது ஒரு தோல் நிற மாற்றம். உடலில் வேறு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. வெண் புள்ளிகள் வந்தால் வருத்தப்பட வேண்டியதில்லை. அவர்கள், புளிப்பான உணவுகளை, தவிர்க்க வேண்டும்.

இது பரம்பரை, பரம்பரையாக வராது. அரைகுறை தகவல்களை வைத்துக் கொண்டு, வெண்புள்ளி உள்ளவர்களின் மனதை, மக்கள் புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் அரவிந்த் கார்த்திகேயன், மேட்டுப்பாளையம் இயக்க செயலாளர் மஸ்தான், கிளை தலைவர் மணி, மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது பாதுஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X