சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி காட்டி தப்பிய வட மாநில இளைஞர்கள் அடுத்தடுத்த சம்பவத்தால் ஸ்ரீபெரும்புதூரில் அச்சம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடத்தில் டாஸ்மாக் ஊழியர் சுட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞர், தன்னை பிடிக்க வந்தவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடத்தில் 'டாஸ்மாக்' கடை


ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடத்தில் டாஸ்மாக் ஊழியர் சுட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞர், தன்னை பிடிக்க வந்தவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடத்தில் 'டாஸ்மாக்' கடை உள்ளது. இங்கு, வாரணவாசியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி துளசிதாஸ் 45; நத்தநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த ராமு 42, ஆகியோர் பணியாற்றி வந்தனர்.சிகிச்சைகடந்த 4ம் தேதி இரவு, பணி முடிந்து கடையை மூடி வெளியே வந்த இருவரையும், மர்ம நபர்கள் இருவர் தாக்கினர். இதில் துளசி தாஸ் அதே இடத்தில் இறந்தார்.படுகாயத்துடன், ராமு சுவர் ஏறி குதித்து தப்பினார். ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.இந்நிலையில், படுகாயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாஸ்மாக் ஊழியர் ராமுவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில், அவரது வலது நுரையீரலில், துப்பாக்கி குண்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ராமு, சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.அறுவை சிகிச்சை மூலம் துப்பாக்கி குண்டு நேற்று அகற்றப்பட்டது.

இந்த தாக்குதலில் குற்றவாளிகள் துப்பாக்கியால் சுட்டது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. இந்நிலையில், நேற்று காலை, ஸ்ரீபெரும்புதுார் அருகே பென்னலுார் கிராமத்தைச் சேர்ந்த இந்திரா, 55, என்ற பெண், சென்னை- - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பென்னலுார் பஸ் நிறுத்தம் பகுதியில் பேருந்துக்கு காத்திருந்தார்.அங்கு வந்த வடமாநில இளைஞர்கள் இருவர், இந்திரா கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தங்க செயினை பறித்து, தப்பி ஓடினர்.இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், தப்பி ஓடிய வடமாநில இளைஞர்களை துரத்தி, ஒருவரை மடக்கி பிடித்தனர்.விசாரணைஅப்போது, அந்த வடமாநில இளைஞர் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதை பார்த்த மக்கள் பயத்தில் அங்கிருந்து ஒடினர். வட மாநில இளைஞர்கள் இருவரும் தப்பினர். இதுகுறித்து ஸ்ரீபெரும் புதுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வட மாநில இளைஞர்கள் தப்பிஓடிய இடத்தில், கீழே விழுந்து கிடந்த துப்பாகி குண்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அவர்களை பிடிக்க 'டிரோன்' கேமராக்களை பறக்கவிட்டு, 50க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சுதாகர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் துப்பாக்கி காட்டியதாக கூறும் நபர்கள் என்ன மாதிரியான துப்பாக்கி வைத்திருந்தார்கள் என, விசாரித்து வருகிறோம். சிலர் பொம்மை துப்பாக்கிகள் கூட வைத்திருக்கிறார்கள். மர்ம நபர்களை தேடிக் கொண்டிருக்கிறோம். 'டாஸ்மாக்' ஊழியர் கொலை சம்பவத்தின்போது தப்பிய சக ஊழியரின் உடம்பில், இரும்பு பொருள் இருப்பதாக கூறியுள்ளனர். அது, துப்பாக்கி குண்டா என, ரிப்போர்ட்டை பார்த்தால் தான் தெரியும்.காஞ்சி எஸ்.பி., சுதாகர்.அதே நபர்களா?ஒரகடத்தில், டாஸ்மாக் ஊழியர்களை இரண்டு மர்ம நபர்கள் கொலை செய்தனர். இவர்கள் துப்பாகியால் சுடப்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட இரண்டு வட மாநில இளைஞர்களில் ஒருவன், துப்பாகி காட்டி மிரட்டியதால் இந்த இரு சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே கும்பலா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

கண்காணிக்கப்படுவரா?தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் தங்கி பணியாற்றுகின்றனர். வட மாநில இளைஞர்களால், ஏற்கனவே ஸ்ரீபெரும்புதுாரில் கஞ்சா பழக்கம் அதிகரித்து விட்டது.இந்நிலையில், வடமாநிலங்களில் எளிதாக கிடைக்கும் நாட்டு துப்பாக்கிகள், வட மாநிலத்தவர் மூலம் ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் புழக்கத்திற்கு வந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியத்தில் உள்ள வட மாநில இளைஞர்கள் குறித்து சரியான கணக்கெடுப்பு நடத்தி, அவர்களை முறையாக கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X