பொது செய்தி

தமிழ்நாடு

காணிக்கை நகைகளை உருக்கக் கூடாது: ஹிந்து முன்னணி தீர்மானம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
சூலுார்:கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்கக்கூடாது என, ஹிந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருப்பூர் மேற்கு மாவட்ட ஹிந்து முன்னணி பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், சூலுாரில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் பேசுகையில்,"நமது பெண் குழந்தைகளுக்கு, நமது
 காணிக்கை நகைகளை உருக்கக் கூடாது: ஹிந்து முன்னணி தீர்மானம்

சூலுார்:கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்கக்கூடாது என, ஹிந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருப்பூர் மேற்கு மாவட்ட ஹிந்து முன்னணி பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், சூலுாரில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் பேசுகையில்,"நமது பெண் குழந்தைகளுக்கு, நமது பாரம்பரியம், கலாசாரம் குறித்து கூறி வளர்க்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஹிந்து முன்னணி செய்யும்," என்றார். பக்தர்கள், காணிக்கையாக கோவிலுக்கு வழங்கிய நகைகளை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சூலுார் பகுதி கோவில் நிலங்களில், தனிநபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X