பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜைக்கு சிறப்பு பஸ்கள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
சென்னை : வரும் 14ம் தேதி ஆயுத பூஜையும், 15ம் தேதி விஜய தசமியும் கொண்டாடப்பட உள்ளது.இதனால், நாளையும், நாளை மறுதினமும், சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் வசதிக்காக, 3,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.மேலும், பயணியரின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னையில் மூன்று இடங்களில் இருந்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பஸ்

சென்னை : வரும் 14ம் தேதி ஆயுத பூஜையும், 15ம் தேதி விஜய தசமியும் கொண்டாடப்பட உள்ளது.இதனால், நாளையும், நாளை மறுதினமும், சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் வசதிக்காக, 3,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும், பயணியரின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னையில் மூன்று இடங்களில் இருந்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து, திண்டிவனம் வழியாக, திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், போளூர், வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலுார், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள் மற்றும் புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படும். பூந்தமல்லி பஸ் நிலையத்திலிருந்து, வேலுார், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் இயக்கப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X