பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி; கவர்னர் தமிழிசை பெருமிதம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
சென்னை--''உலகில் பல வளரும் நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து, நம் நாடு மிகப் பெரிய புகழையும், பாராட்டையும் பெற்று வருகிறது,'' என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், விழித்திரை அறுவை சிகிச்சை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, தெலுங்கானா கவர்னர் தமிழிசை
 கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி; கவர்னர் தமிழிசை பெருமிதம்

சென்னை--''உலகில் பல வளரும் நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து, நம் நாடு மிகப் பெரிய புகழையும், பாராட்டையும் பெற்று வருகிறது,'' என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், விழித்திரை அறுவை சிகிச்சை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:கண் டாக்டர்கள், பல்வேறு நோய்களை முன்கூட்டியே அறியும் தன்மை பெற்றவர்கள். காரணம், கண்களே உடலின் சாளரங்கள். கண்கள் தான் உடல், மனம் சார்ந்த மகிழ்ச்சியையும், வலியையும் முதலில் தெரியப்படுத்தும். நம் நாட்டில் கி.மு., 800லேயே, சிஷ்ரூதர் என்பவர் கண்புரை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அந்த அளவுக்கு, உடலின் மிக மெல்லிய உறுப்பான கண்களுக்கான சிகிச்சையில் வல்லமை பெற்று இருந்தனர். பெருந்தொற்று காலத்தில், சென்னை உள்ளிட்ட மருத்துவக் கல்லுாரி மருந்துவமனைகளின் சேவை அலாதியானது.அதேபோல, நம் நாட்டின் விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மிகச் சிறந்த சேவையாற்றி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டை காத்தனர். குறிப்பாக, தடுப்பூசி கண்டுபிடிப்பிலும், தயாரிப்பிலும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.

பல ஆயிரம் கோடி ரூபாயை மக்களுக்காக ஒதுக்கி, நாட்டை பிரதமர் காத்து வருகிறார். அது மட்டுமல்ல, உலகில் பல வளரும் நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து, நம் நாடு மிகப் பெரிய புகழையும், பாராட்டையும் பெற்று வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X