பொது செய்தி

தமிழ்நாடு

61வது வாரமாக களப்பணி: தன்னார்வலர்கள் அசத்தல்

Added : அக் 10, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்,:அக்ரஹார சாமக்குளத்தில், 61வது வாரமாக நேற்று 100 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், ஏ.எஸ். குளத்தில், 160 ஏக்கர் பரப்பளவுள்ள அக்ரஹார சாமக்குளம் உள்ளது.இந்த குளம் பராமரிப்பின்றி குப்பை கிடங்காக இருந்தது. காலிங்கராயன் ஏரி பாதுகாப்பு அமைப்பினர் உள்ளிட்ட தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து, அக்ரஹார சாமகுளம் ஏரி பாதுகாப்பு அமைப்பை

கோவில்பாளையம்,:அக்ரஹார சாமக்குளத்தில், 61வது வாரமாக நேற்று 100 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், ஏ.எஸ். குளத்தில், 160 ஏக்கர் பரப்பளவுள்ள அக்ரஹார சாமக்குளம் உள்ளது.இந்த குளம் பராமரிப்பின்றி குப்பை கிடங்காக இருந்தது. காலிங்கராயன் ஏரி பாதுகாப்பு அமைப்பினர் உள்ளிட்ட தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து, அக்ரஹார சாமகுளம் ஏரி பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தினர்.வாரம்தோறும், ஞாயிறன்று களப்பணி செய்து வருகின்றனர். 61வது வாரமாக, நேற்று, அரிய வகை நாட்டு மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இந்த மரக்கன்றுகள் நன்கு வளரும் வரை, பராமரிக்கும் பணியை, சில தொண்டு நிறுவனங்கள் ஏற்றுள்ளன.நேற்று, களப்பணியில் கோவை கிரீன் லீக் அமைப்பின் சீனிவாசன், டாக்டர் ஸ்வேதா, சிறுதுளி அமைப்பின் சங்கீதா, புரூக் ஷீல்ட் மேலாளர் சுஜாதா ஆகியோர் பங்கேற்றனர்.'மரக்கன்று நடும் பணி நவம்பர் மாத இறுதி வரை நடைபெறும். முழுமையாக வாய்ப்புள்ள அனைத்து இடத்திலும் நாட்டு மரக்கன்றுகள் நடப்படும்' என, தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.தன்னார்வலர்கள் பாலகுருசாமி, விஜய்பாபு, துரைசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினர்கள் குளத்தில் நடைபெற்று வரும் மழை நீர் வரும் பள்ளத்தை துார் வாருதல், கரை ஒழுங்கு படுத்துதல், அடர்வனம் அமைத்தல் உள்ளிட்டபணிகளை பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X