சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
மின்சாரம் பாய்ந்து இருவர் பலிஆர்.கே.நகர்: ஆர்.கே.நகர், கோபால் நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர், 32; ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று வீட்டிலுள்ள 'ஹோம் தியேட்டரை' பழுது பார்த்தபோது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. திருமங்கலம்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சரவிதாஸ், 24. இவர்,

மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
ஆர்.கே.நகர்: ஆர்.கே.நகர், கோபால் நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர், 32; ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று வீட்டிலுள்ள 'ஹோம் தியேட்டரை' பழுது பார்த்தபோது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. திருமங்கலம்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சரவிதாஸ், 24. இவர், சென்னை திருமங்கலத்தில் உள்ள டிபன் கடையில் தங்கி வேலை செய்து வந்தார்.நேற்று மாலை, கடை அருகே, தரை வழியாக சென்ற ஒயர் மீது மிதித்த போது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது. இது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

'பைக்' திருடியவர் சிக்கினார்

ஐஸ் ஹவுஸ்: திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 39. நேற்று முன்தினம் இரவு, டாக்டர் நடேசன் சாலையிலுள்ள நண்பரின் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். இரவு 11:00 மணிக்கு வெளியே வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரிந்தது. ஐஸ்ஹவுஸ் போலீசாரின் விசாரணையில், ராயப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக், 31, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

ஓய்வு வங்கி அதிகாரி வீட்டில் திருட்டு

விருகம்பாக்கம்: சாலிகிராமம், வால்மீகி தெருவைச் சேர்ந்தவர் வெங்கட சுப்ரமணியன், 61; ஓய்வுபெற்ற வங்கி மேலாளர். இவரது மனைவி சீதா, 56. தம்பதி அண்மையில் பீரோவை திறந்து பார்த்தபோது, 30 சவரன் நகை மாயமானது தெரிய வந்தது. தெரிந்தவர்கள் தான் திருடியிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். மாம்பலம்: ராமாபுரத்தைச் சேர்ந்தவர் வீரராகவன், 69. இவர், நேற்று முன்தினம் தி.நகரில் நகைகளுக்கு பாலீஷ் போட சென்றார். 12.5 சவரன் நகையுடன், உஸ்மான் சாலையில் உள்ள கடைக்கு துணி வாங்க சென்றார். கடையில் இருந்து திரும்பும் போது, பையில் இருந்த நகைகளும் மாயமாகி இருந்தன. மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் கைதுதுரைப்பாக்கம்: ஓ.எம்.ஆர்., பெருங்குடியில் எலக்ட்ரானிக் ஷோரூம் ஒன்று உள்ளது.

இங்கு வாங்கும் பொருட்களுக்கு, 'பஜாஜ் பைனான்ஸ்' நிறுவனம் கடன் வழங்குகிறது. இதை தவறாக பயன்படுத்தி, ஷோரூமில் பணி புரியும் வீரமணி, 32, ஸ்டீபன், 37, ஆகியோர், 1.53 லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி மோசடி செய்தனர்.துரைப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், வீரமணி, ஸ்டீபன் ஆகியோர் ஷோரூம் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஆவணங்களை திருடி, போலியான ஆவணம் தயாரித்து, போன்கள், 'டிவி' உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி மோசடி செய்துள்ளனர். நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டியிடம் நகை 'ஆட்டை'

குன்றத்துார்: செம்பரம்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்வரி, 59. நேற்று, சோமங்கலத்தில் உள்ள, தன் மகள் ரேணுகாதேவியின் வீட்டிற்கு செல்ல, செம்பரம்பாக்கம் பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், ராஜேஷ்வரியிடம் பேச்சு கொடுத்து, நகைகள் 'ஆட்டை' போட்டு சென்றனர். இது குறித்து, நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்

.எடைக்கல்லால் தாக்கியவர் கைது

ஆர்.கே.நகர்: கொடுங்கையூர், எழில் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் பூபாலன், 39. கொடுங்கையூர், சத்யா நகரைச் சேர்ந்தவர் சத்யா, 34. இருவரும் பழ வியாபாரிகள். வியாபார போட்டியால், சத்யா எடைக்கல்லால் பூபாலனின் தலையில் அடித்தார். காயமடைந்த பூபாலன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து, சத்யாவை நேற்று கைது செய்தனர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டோருக்கு 'காப்பு'

நொளம்பூர்: நொளம்பூர், மோகனராம் நகரில் உள்ள மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக, நொளம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெரம்பூரைச் சேர்ந்த விக்னேஷ், 30, புதுக்கோட்டையைச் சேர்ந்த அகமது, 20, திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்ரீராம், 20, ஆகிய மூவரை கைது செய்தனர். 11 பெண்களை மீட்டு, மயிலாப்பூரில் உள்ள, அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X