அரசியல் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் தரையில் துாங்கிய 'மாஜி' மத்திய அமைச்சர்

Added : அக் 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருநெல்வேலி--போலீசாரால் கைது செய்யப்பட்ட பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனில் தரையில் படுத்து துாங்கினார். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் நிமிதாவை ஆதரித்து கட்சி நிர்வாகி பாஸ்கர் பிரசாரம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி தி.மு.க., - எம்.பி., ஞானதிரவியம்,
 போலீஸ் ஸ்டேஷன் தரையில்  துாங்கிய 'மாஜி' மத்திய அமைச்சர்

திருநெல்வேலி--போலீசாரால் கைது செய்யப்பட்ட பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனில் தரையில் படுத்து துாங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் நிமிதாவை ஆதரித்து கட்சி நிர்வாகி பாஸ்கர் பிரசாரம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி தி.மு.க., - எம்.பி., ஞானதிரவியம், அவரது மகன்கள் சேவியர்ராஜா, தினகர் அக்., 8ல் பாஸ்கரை தாக்கினர். பாஸ்கர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவர் புகார் அளித்தும் போலீசார் வழக்கு பதியவில்லை. நேற்று முன்தினம் இரவு, பாஸ்கரை சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடல்நலம் விசாரித்தார்.பின், ஞானதிரவியம் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, இரவு 10:00 மணிக்கு திருநெல்வேலி ஜங்ஷன் பாரதியார் சிலை முன் தரையில் அமர்ந்து போராட்டம் துவங்கினார்.

அவருடன் மாவட்ட தலைவர் மகராஜன் உட்பட 30 பேர் பங்கேற்றனர்.இதையடுத்து, ஞானதிரவியம் மற்றும் மகன்கள் மீது, நான்கு பிரிவுகளில் பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆயினும், கொலை முயற்சி 307 பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறி பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தை தொடர்ந்தார். இரவு 11:00 மணிக்கு துணை கமிஷனர் சுரேஷ்குமார் வந்து பேச்சு நடத்தினார். பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தை தொடர்ந்ததால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்கு வழக்கு பதிவு செய்ததாக கூறி, பொன். ராதாகிருஷ்ணன் உட்பட நான்கு பேரை ஜங்ஷன் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, 'உங்களை சொந்த ஜாமினில் விடுவிக்கிறோம்; கிளம்பலாம்' என்றனர். ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன், கையோடு கொண்டு வந்த போர்வையை போர்த்தி, தரையில் படுத்து துாங்கினார்.போலீசாரும், பொன். ராதாகிருஷ்ணனுடன் வந்த பா.ஜ.,வினரும் காத்திருந்தனர். காலை 6:00 மணிக்கு எழுந்த பொன். ராதாகிருஷ்ணன் கிளம்பிச் சென்றார். இதற்கிடையில், ஞானதிரவியத்தின் வீட்டு தோட்டக்காரர் நாகராஜன் புகாரின்படி, பா.ஜ., பிரமுகர் பாஸ்கர், வேட்பாளர் நமிதாவின் கணவர் உட்பட ஐந்து பேர் மீது தீண்டாமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
12-அக்-202105:15:26 IST Report Abuse
meenakshisundaram சசிகலா டெக்னீக் தெரியலியே பேசாமே துட்டை தள்ளி விட்டா பதிலுக்கு இன்னொரு ஆளை அனுப்பி இருப்பார்களே
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
11-அக்-202105:29:19 IST Report Abuse
Raman மாஜி என்றாலே இப்படித்தான் நடிக்கவேண்டும்.. இதுகூட தெரியாதா? இவர் தப்பி தவறி மந்திரியா இருக்கும்போது என்ன அலப்பறை ? ஹா ஹா ஹா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X