சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீயில் கருகிய அரிசி லாரி

Added : அக் 10, 2021
Share
Advertisement
தர்மபுரி-தொப்பூர் கணவாயில் நேற்று காலை, அரிசி லாரி கவிழ்ந்து தீப்பற்றியது. ஒடிசா மாநிலத்தில் இருந்து அரிசி ஏற்றிய லாரி, கேரளாவுக்கு புறப்பட்டது. இந்த லாரி, நேற்று காலை தர்மபுரி வழியாக சென்றது. லாரியை கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த அனுக், 31, ஓட்டினார். மாற்று டிரைவராக காங்கேயத்தைச் சேர்ந்த பழனி, 40, உடன் வந்தார்.நேற்று காலை 11:30 மணிக்கு தொப்பூர் கணவாயில், டிரைவரின்
 தீயில் கருகிய அரிசி லாரி

தர்மபுரி-தொப்பூர் கணவாயில் நேற்று காலை, அரிசி லாரி கவிழ்ந்து தீப்பற்றியது. ஒடிசா மாநிலத்தில் இருந்து அரிசி ஏற்றிய லாரி, கேரளாவுக்கு புறப்பட்டது.

இந்த லாரி, நேற்று காலை தர்மபுரி வழியாக சென்றது. லாரியை கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த அனுக், 31, ஓட்டினார். மாற்று டிரைவராக காங்கேயத்தைச் சேர்ந்த பழனி, 40, உடன் வந்தார்.நேற்று காலை 11:30 மணிக்கு தொப்பூர் கணவாயில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தடுப்புச்சுவரை உடைத்து, எதிர் திசையில் கவிழ்ந்து தீப்பற்றியது.

அங்கிருந்தவர்கள் இடிபாடிகளுக்குள் சிக்கிய அனுக், பழனியை பத்திரமாக மீட்டனர். தர்மபுரி தீயணைப்பு துறையினர் வந்து, லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆயினும், லாரியின் பெரும்பாலான பகுதி எரிந்ததால், அதிலிருந்த அரிசி மூட்டைகளும் நாசமாகின. இச்சம்பவத்தால், தொப்பூர் கணவாயில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X