குழந்தைகள் கடத்தலை தடுக்க சிசிடிவி பொருத்த திட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் கடத்தலை தடுக்க 'சிசிடிவி' பொருத்த திட்டம்

Added : அக் 10, 2021
Share
ராமநாதபுரம்--''அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் அகதிகள் முகாம், தேவிப்பட்டினம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் நேற்று நடந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாம்களை துவக்கி வைத்த அமைச்சர் சுப்பிரமணியன்
 குழந்தைகள் கடத்தலை தடுக்க 'சிசிடிவி' பொருத்த திட்டம்

ராமநாதபுரம்--''அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் அகதிகள் முகாம், தேவிப்பட்டினம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் நேற்று நடந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாம்களை துவக்கி வைத்த அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழகத்தில் இதுவரை, 64 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் 59.91 சதவீதம் பேருக்கு தான் போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.நாட்டிலேயே, தமிழகத் தில் மட்டும் தான் மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

குழந்தைகள் திருட்டை தடுக்க, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தப்படும்.பெற்றோரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்கள் உதவி செய்வது போல் வந்தால், கவனமுடன் இருந்து அவர்களை அடையாளம் காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X