சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விளையாடிய சிறுவன் ஓடையில் மூழ்கி பலி

Added : அக் 10, 2021
Share
Advertisement
செங்கம்-செங்கம் அருகே, ஓடையில் விளையாடிய சிறுவன், திடீர் நீர் வரத்தால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை நீர், ஓடைகள் வழியாக செய்யாற்றில் கலக்கிறது. நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் மகன் சற்குணம், 3,

செங்கம்-செங்கம் அருகே, ஓடையில் விளையாடிய சிறுவன், திடீர் நீர் வரத்தால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை நீர், ஓடைகள் வழியாக செய்யாற்றில் கலக்கிறது. நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் மகன் சற்குணம், 3, அப்பகுதியில் உள்ள ஓடையில் விளையாடிய போது, திடீரென நீர் வந்ததில் அடித்து செல்லப்பட்டான்.

சிறிது நேரம் கழித்து சற்குணம் இல்லாததை கண்டு, அவரது பெற்றோர் தேடினர். நீண்ட நேரத்திற்கு பின் சற்குணம் சடலம், ஓடையின் கரையில் ஒதுங்கியது.ஓடையின் குறுக்கே பாலம் கட்டி தரப்படாததை கண்டித்து, நேற்று காலை செங்கம் - வலசை சாலையில், சற்குணத்தின் சடலத்தை வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., சின்னராஜ் பேச்சு நடத்தி, 'பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியதை அடுத்து, மக்கள் மறியலை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X