பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவர் - சிறுமியருக்கு மரக்கன்று நடும் பயிற்சி

Added : அக் 10, 2021
Share
Advertisement
வேளச்சேரி : வேளச்சேரி பகுதியை பசுமையாக்கும் முயற்சியில், மரக்கன்றுகள் நடும் பணியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல, சிறுவர் - சிறுமியருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.வேளச்சேரி மற்றும் பெருங்குடி ரயில் நிலையம் இடைப்பட்ட பகுதியை பசுமையாக்க, 'கிரீன் வேளச்சேரி' அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதற்காக, சில மாதங்களாக, புதர்களை அகற்றி சுத்தம் செய்து, மரக்கன்று நடும் பணியில்

வேளச்சேரி : வேளச்சேரி பகுதியை பசுமையாக்கும் முயற்சியில், மரக்கன்றுகள் நடும் பணியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல, சிறுவர் - சிறுமியருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

வேளச்சேரி மற்றும் பெருங்குடி ரயில் நிலையம் இடைப்பட்ட பகுதியை பசுமையாக்க, 'கிரீன் வேளச்சேரி' அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதற்காக, சில மாதங்களாக, புதர்களை அகற்றி சுத்தம் செய்து, மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று, ரயில்வே நிர்வாகம், அபக்ஸ் கிளப், எக்ஸ்னோரா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, 300 மரக்கன்றுகள் நட்டனர். இதற்கு, தண்ணீர் ஊற்றி பராமரிக்க, தண்ணீர் தொட்டியும் அமைத்துள்ளனர்.மரக்கன்று நட்டு பராமரிக்கும் சேவையை, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக, சிறுவர் - சிறுமியருக்கு மரக்கன்று நட்டு பராமரிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.பள்ளம் தோண்டுவது; எவ்வளவு ஆழம் தோண்ட வேண்டும்; மரக்கன்றுகள் நடும் இடைவெளி; மண்ணின் தன்மைக்கு ஏற்ப நடும் மரக்கன்றுகள்; தண்ணீர் ஊற்றுவதன் முறைகள்; கால்நடைகளிடம் இருந்து எப்படி பாதுகாப்பது போன்றவை குறித்து, அவர்களுக்கு விளக்கப்பட்டது.''இதன்மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்மேலாண்மை, மரங்களால் ஏற்படும் நன்மை குறித்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும்,'' என, கிரீன் வேளச்சேரி அறக்கட்டளை செயலர் ரவிச்சந்திரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X