அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி

Added : அக் 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல்- -''நீட்' தேர்வை வைத்து எந்தக்கட்சியும் அரசியல் செய்ய வேண்டாம்,''என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. பல இடங்களில் விதிமுறைகள் பின்பற்றவில்லை. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தி.மு.க., நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக

திண்டுக்கல்- -''நீட்' தேர்வை வைத்து எந்தக்கட்சியும் அரசியல் செய்ய வேண்டாம்,''என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. பல இடங்களில் விதிமுறைகள் பின்பற்றவில்லை. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தி.மு.க., நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்திருந்தது. இதன் மீது மக்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி நிறைவேற்றுவதில் அரசு காலம் தாழ்த்தக்கூடாது.

மழைக்காலம் என்பதால் சுகாதாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். 'டெங்கு' காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும். மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் தனியாரிடம் நெல் விற்கின்றனர்.அரசு கொள்முதல் செய்தால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். எனவே நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் 'நீட்' தேர்வு உடனே ரத்து செய்யப்படும் என்றனர். ஆனால் மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளானதுதான் மிச்சம். 'நீட்' தேர்வை வைத்து எந்தக்கட்சியும் அரசியல் செய்ய வேண்டாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X