டெங்கு கொசு உற்பத்தி ரூ.1 லட்சம் அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டெங்கு' கொசு உற்பத்தி ரூ.1 லட்சம் அபராதம்

Added : அக் 10, 2021
Share
துரைப்பாக்கம், : துரைப்பாக்கத்தில், டெங்கு காய்ச்சல் பரப்பும் 'ஏடிஸ்' கொசு உற்பத்திக்கு காரணமான கட்டுமான நிறுவனத்திற்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ஒக்கியம்பேட்டை, சக்திகார்டன் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடக்கிறது.இங்கு, கட்டுமான ஊழியர்களும் தங்கி உள்ளனர். நேற்றுமுன்தினம், மண்டல சுகாதார

துரைப்பாக்கம், : துரைப்பாக்கத்தில், டெங்கு காய்ச்சல் பரப்பும் 'ஏடிஸ்' கொசு உற்பத்திக்கு காரணமான கட்டுமான நிறுவனத்திற்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ஒக்கியம்பேட்டை, சக்திகார்டன் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடக்கிறது.இங்கு, கட்டுமான ஊழியர்களும் தங்கி உள்ளனர். நேற்றுமுன்தினம், மண்டல சுகாதார அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு, தேங்கி வைத்த தண்ணீரில், 'டெங்கு' காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அந்த கட்டுமான நிறுவனத்திற்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X