பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ, பஸ்களில் அலைமோதிய மக்கள்

Added : அக் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : புறநகர் மின்சார ரயில்கள் ரத்தால், மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில், நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே, ரயில் பாதையில் நேற்று பராமரிப்பு பணி நடந்தது. இதனால், தாம்பரம் - கடற்கரை நிலையங்கள் இடையே, காலை 11:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை, 14 ரயில்கள் முழுதுமாகவும், கடற்கரை - செங்கல்பட்டு இடையே 11 ரயில்கள் பாதி வழியிலும் ரத்து
 மெட்ரோ, பஸ்களில் அலைமோதிய மக்கள்

சென்னை : புறநகர் மின்சார ரயில்கள் ரத்தால், மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில், நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே, ரயில் பாதையில் நேற்று பராமரிப்பு பணி நடந்தது.

இதனால், தாம்பரம் - கடற்கரை நிலையங்கள் இடையே, காலை 11:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை, 14 ரயில்கள் முழுதுமாகவும், கடற்கரை - செங்கல்பட்டு இடையே 11 ரயில்கள் பாதி வழியிலும் ரத்து செய்யப்பட்டிருந்தன.இந்நிலையில், மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வு நேற்று நடந்ததால், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தேர்வு எழுத வந்தவர்களில் அதிகமானோர், மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.இதனால், விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்களில், பயணியர் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து காணப்பட்டது.தாம்பரத்தில் இருந்து, சென்ட்ரல், பாரிமுனை, திருவொற்றியூர் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது.
உதவிய அதிகாரிகள்
தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் மின்சார ரயில் நிலையங்களில், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், கோட்டை நிலையங்கள் தவிர மற்ற நிலையங்களில், ரயில் போக்குவரத்து குறித்த அறிவிப்பு அமைப்புகள் செயல்படவில்லை.

இதனால், ரயில்கள் ரத்து, தாமதம் குறித்த எந்த தகவலும் தெரியாமல், பயணியர் நிலையங்களில் காத்திருந்தனர். அவர்களுக்கு டிக்கெட் கிளார்க்குகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்தனர். இதனால், பயணியர் மாற்று போக்குவரத்தை நாடினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-அக்-202121:34:55 IST Report Abuse
அப்புசாமி இன்னும் புறநகர் ரயில்களை தனியார் குத்தகைக்கு விடலியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X