பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பின்றி கிடக்கும் கிண்டி சிறுவர் பூங்கா

Added : அக் 11, 2021
Share
Advertisement
சென்னை : முறையான பராமரிப்பு இல்லாததால், கிண்டி சிறுவர் பூங்கா, பாழடைந்துள்ளது. கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியின்றியும், வளாகங்களில் புல், புதர்கள் மண்டியும் காணப்படுவதால், அங்கு வரும் சிறுவர் -- சிறுமியருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.தமிழக வனத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில், கிண்டி தேசிய சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. கவர்னர் மாளிகையின், 696 ஏக்கர் பரப்பளவில்,

சென்னை : முறையான பராமரிப்பு இல்லாததால், கிண்டி சிறுவர் பூங்கா, பாழடைந்துள்ளது. கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியின்றியும், வளாகங்களில் புல், புதர்கள் மண்டியும் காணப்படுவதால், அங்கு வரும் சிறுவர் -- சிறுமியருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக வனத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில், கிண்டி தேசிய சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. கவர்னர் மாளிகையின், 696 ஏக்கர் பரப்பளவில், ஒரு பகுதியில் அமைந்துள்ள இப்பூங்கா, நாட்டிலேயே சிறிய தேசிய பூங்காவாக செயல்படுகிறது.இங்கு பல்வேறு விலங்குகள், பறவைகள், ஊர்வன ஆகியவை பராமரிக்கப்படுகின்றன. 1978ம் ஆண்டு முதல் செயல்படும் இப்பூங்கா, மாணவ - மாணவியருக்கு பயனுள்ள வகையில் உள்ளது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பள்ளி மாணவ - மாணவியர் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். அண்டை மாநில பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பூங்கா மூடப்பட்டிருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டு, பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால், பறவைகள், விலங்குள் மட்டுமின்றி, பார்வையாளர்களும் அவதிப்படும் சூழல் நிலவுகிறது. பல இடங்களில் கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன. செயல்படும் நிலையில் உள்ள சில கழிவறைகளும் பராமரிப்பின்றி கிடப்பதால், துர்நாற்றம் வீசுகிறது.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, தொட்டிகளில் தேக்கப்பட்டுள்ள நீர், பாசி படர்ந்து, கழிவுநீராக மாறியுள்ளது. சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் பராமரிப்பின்றி, அதன் இரும்பு தகடுகள் உடைந்து, சிறுவர் - சிறுமியருக்கு காயம் ஏற்படுத்தி பதம் பார்ப்பதாக உள்ளது. மொத்தத்தில், பூங்கா முழுதும் சிறிதும் பராமரிப்பின்றி, பாழடைந்து காட்சிஅளிக்கிறது. விலங்குகளுக்கான நிதியை விழுங்கியது யார்?விலங்குகள், பறவைகளுக்கான உணவு, வளாகத்தின் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்பது குறித்து விசாரணை நடத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.

பார்வையாளர்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், இந்த பூங்காவை பார்க்கும் மாணவ, மாணவியருக்கு, இயற்கை, சுற்றுச்சூழல், விலங்குகள், பறவைகள் குறித்து, சரியான கற்றல் அனுபவம் கிடைக்குமா என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூங்காவின் பெரும்பாலான பகுதி இடங்கள், முட்புதர்களாக இருப்பதால், இங்கு இளம் ஜோடிகள் தஞ்சம் அடைவதும் அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X