பொது செய்தி

தமிழ்நாடு

மேகமலையில் யானைகள்  எண்ணிக்கை அதிகரிப்பு

Added : அக் 11, 2021
Share
Advertisement
கம்பம்--மேகமலையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறை எச்சரித்துள்ளது.மேகமலை வன சரணாலயம் தற்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு யானைகள், புலி, சிறுத்தை, மான்கள், கரடி உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. தற்போது வனஉயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் மற்ற விலங்குளை காட்டிலும்

கம்பம்--மேகமலையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறை எச்சரித்துள்ளது.

மேகமலை வன சரணாலயம் தற்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு யானைகள், புலி, சிறுத்தை, மான்கள், கரடி உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. தற்போது வனஉயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் மற்ற விலங்குளை காட்டிலும் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

ரேஞ்சர் கர்ணன் கூறுகையில், 'முன்பு யானைகள் மேகமலை, ைஹவேவிஸ், இரவங்கலாறு பகுதிகளில் மட்டுமே காணப்படும். தற்போது மலைப்பாதையிலும் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குட்டிகளுடன் யானைக் கூட்டம் சின்னமனுார் ரோடு அடிவாரம் வரை வந்து செல்கிறது. எனவே, மேகமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X