சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தி.மு.க., பிரமுகர் மனைவி கைது.

Added : அக் 11, 2021
Share
Advertisement
ஜாம்பஜார் : தி.மு.க., பிரமுகர் தற்கொலைக்கு துாண்டுதலாக இருந்த 'பாசக்கார' மனைவியை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, ஜாம்பஜார், முகமது உசேன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் வித்தியகுமார், 38; தி.மு.க., பிரமுகர். இவர், சுபநிகழ்ச்சிக்கான பந்தல் மற்றும் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்து தொழில் செய்து வந்தார்.இவருக்கும், நிஷா என்பவருக்கும் எட்டு மாதங்களுக்கு முன் திருமணமானது. தம்பதி இடையே

ஜாம்பஜார் : தி.மு.க., பிரமுகர் தற்கொலைக்கு துாண்டுதலாக இருந்த 'பாசக்கார' மனைவியை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ஜாம்பஜார், முகமது உசேன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் வித்தியகுமார், 38; தி.மு.க., பிரமுகர். இவர், சுபநிகழ்ச்சிக்கான பந்தல் மற்றும் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்து தொழில் செய்து வந்தார்.இவருக்கும், நிஷா என்பவருக்கும் எட்டு மாதங்களுக்கு முன் திருமணமானது. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 4ம் தேதி அண்ணாசாலை காவல் நிலையத்தில் நிஷாவின் தாய், வித்தியகுமார் மகளை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்தார்.

இதை அறிந்த வித்தியகுமார், அன்றைய தினமே துாக்கிட்டு தற்கொலை செய்தார்.வித்தியகுமார் தற்கொலை செய்வதற்கு முன், மொபைல் போனில் 'தன் சாவுக்கு மனைவியும், அவரது குடும்பத்தினரும் தான் காரணம்' என, 'வீடியோ' பதிவு செய்து வைத்தார்.அந்த பதிவில், தன் மனைவி நிஷா, மனைவியின் சகோதரி உஷா மற்றும் அவரது கணவர் ஆகியோர், தன்னை பல வகையில் துன்புறுத்தி வருவதாகவும், நிஷா மற்றும் அவரது உறவினர்கள் அடிப்பதாலேயே தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது.

ஜாம்பஜார் போலீசாரின் விசாரணையில், வித்தியகுமார் தற்கொலைக்கு நிஷா துாண்டுதலாக இருந்தது உறுதியானது. இதையடுத்து, நேற்று நிஷாவை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X