தமிழ்நாடு

காவல் ஆணையரக எல்லைகள் வரையறை!

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021
Share
Advertisement
சென்னை : புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களுடன் இணைய உள்ள காவல் நிலையங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.அதன்படி, தாம்பரம் ஆணையரகத்தின் கீழ், 20 மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ், 25 காவல் நிலையங்கள் செயல்பட உள்ளன. சென்னை ஆணையரகத்தின் கீழ், 104 காவல் நிலையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு
 காவல் ஆணையரக எல்லைகள் வரையறை!

சென்னை : புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களுடன் இணைய உள்ள காவல் நிலையங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தாம்பரம் ஆணையரகத்தின் கீழ், 20 மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ், 25 காவல் நிலையங்கள் செயல்பட உள்ளன. சென்னை ஆணையரகத்தின் கீழ், 104 காவல் நிலையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார். சட்டசபையில், போலீஸ் மானியக்கோரிக்கையின் போது, முதல்வர் ஸ்டாலின், 'சென்னையில் புதிதாக ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள் உருவாக்கப்படும்' என, அறிவித்தார்.

அதன்படி, புதிய போலீஸ் கமிஷனர் அலுவலங்களை உருவாக்க, தாம்பரத்திற்கு ரவி, ஆவடிக்கு சந்தீப் ராய் ரத்தோர் என, சிறப்பு அதிகாரிகளாக, கூடுதல் டி.ஜி.பி.,க்கள் நியமிக்கப்பட்டனர்.இவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுடன் இணைந்து, புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகங்களின் நிர்வாக அமைப்பு, எல்லைகள் அதற்கான வரைபடம் தயாரிப்பு, காவல் நிலையங்கள், பணியாளர்கள், வாகனங்கள் என, அனைத்து விபரங்களையும் ஆலோசித்து, அறிக்கை தயாரித்து, டி.ஜி.பி., சைலேந்திரபாபுவிடம் சமர்ப்பித்தனர். இறுதி முடிவுஅந்த அறிக்கையின் அடிப்படையில், சங்கர் ஜிவால், ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோருடன், டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆலோசனை கூட்டம் நடத்தி, அதில் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.அதன்படி, மூன்று காவல் ஆணையரங்களின் எல்லைகள் இறுதி செய்யப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆவடி மற்றும் தாம்பரம் கமிஷனர் அலுவலகங்களின், தற்காலிக தலைமையிடமும் இதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்டு உள்ள சுற்றறிக்கை: தற்போது சென்னை போலீஸ் கமிஷனரின் கீழ் செயல்படும் பரங்கிமலையில், தெற்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்படும் அம்பத்துாரில், மேற்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்படும். இவர்களின் கீழ், நுண்ணறிவு பிரிவு, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பணிபுரிவர். அமைச்சுப்பணியாளர்களான கண்காணிப்பாளர், அலுவலக உதவியாளர், தட்டச்சர்கள் பணியிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளன.

இரண்டு ஓட்டுனர்களுடன் நல்ல நிலையில் வாகனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.தற்போது, சென்னை, ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகங்களுக்கு கீழ் செயல்படும் காவல் நிலையங்கள் குறித்து இறுதி செய்து, அதற்கான பட்டியலை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். உருவாக்கம்இதன்படி, மூன்று காவல் ஆணையரங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆவடி மற்றும் தாம்பரம் கமிஷனர் அலுவலகங்களுடன், ௪௫ காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டுஉள்ளன. பெருநகர சென்னை காவல் ஆணையரகத்தின் கீழ் ஏற்கனவே, 137 காவல் நிலையங்கள் செயல்பட்ட நிலையில், தற்போது, 104 காவல் நிலையங்களுடன் செயல்பட உள்ளது.

சென்னை காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும், 13 காவல் நிலையங்களுடன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரு காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஐந்து காவல் நிலையங்களும் இணைக்கப்பட்டு, தாம்பரம் காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டுஉள்ளது.அதன்படி, தாம்பரம் ஆணையரகத்தின் கீழ், 20 காவல் நிலையங்கள் செயல்படும். அதே போல், சென்னை காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும் 20 காவல் நிலையங்களுடன், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, ஐந்து காவல் நிலையங்களும் சேர்த்து, ஆவடி காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டுள்ளது.நடவடிக்கைஅதன் படி, ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ், மொத்தம் 25 காவல் நிலையங்கள் செயல்படும். தாம்பரம், ஆவடி ஆணையரக சிறப்பு அதிகாரிகள், புதிய ஆணையரகத்திற்கு தேவையான அலுவலக வசதிகள், ஆயுதம், போலீசார் உள்ளிட்ட விபரங்களை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு தெரியப்படுத்தலாம்.காவல் எல்லை வரையறையில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால், அதையும் தெரியப்படுத்தலாம். அப்படி ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டிஇருப்பின், ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதிய ஆணையரக சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் டி.ஜி.பி.,க்கள் ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர், இம்மாத இறுதிக்குள் தங்களுக்கான அலுவலகங்களில் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ஆணையரகம் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்கள்:தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், சிட்லபாக்கம், பீர்க்கங்கரணை, குன்றத்துார், கானத்துார், சங்கர் நகர், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், கானத்துார் காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்ட, சோமங்கலம், மணிமங்கலம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்ட, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், தாழம்பூர், கேளம்பாக்கம் என மொத்தம், 20 காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.ஆவடி ஆணையரகம்ஆவடி கமிஷனர் அலுவலகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்கள்:மாதவரம் பால்பண்ணை,

செங்குன்றம், மணலி, சாத்தாங்காடு, மணலி நியூ டவுன், எண்ணுார், மாங்காடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, முத்தாபுதுப்பேட்டை, பட்டாபிராம், அம்பத்துார், அம்பத்துார் எஸ்டேட், கொரட்டூர், திருவேற்காடு, போரூர், ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல், திருநின்றவூர் காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்ட, வெல்லவேடு, செவ்வாய்பேட்டை, சோழவரம், மீஞ்சூர், காட்டூர் என, மொத்தம் 25 காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.சென்னை ஆணையரகம்சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் காவல் நிலையங்கள்:பூக்கடை, யானைக்கவுனி, ஏழுகிணறு, ஸ்டான்லி மருத்துவமனை, எஸ்பிளனேடு, உயர் நீதிமன்றம், துறைமுகம், வடக்கு கடற்கரை, கோட்டை, மிதவை காவல் நிலையம், முத்தையால்பேட்டை, கொத்தவால்சாவடிவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ராயபுரம், மருத்துவமனை புறக்காவல்,

காசிமேடு, மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், புழல், மாதவரம், எம்.கே.பி.,நகர், கொடுங்கையூர்.வியாசர்பாடி, செம்பியம், பெரவள்ளூர், திரு.வி.க., நகர், புளியந்தோப்பு, ஓட்டேரி, பெசன்ட் நகர், அமைந்தகரை, அண்ணா நகர், அரும்பாக்கம், ஜெ.ஜெ.,நகர், திருமங்கலம், நொளம்பூர், வில்லிவாக்கம், ராஜமங்கலம், கொளத்துார், கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், மதுரவாயல்டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, வேப்பேரி, பெரியமேடு, அயனாவரம், ஐ.சி.எப்., தலைமைச்செயலக காலனி, மன நல மருத்துவமனை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, ஜாம்பஜார், அண்ணா சதுக்கம்.எம்.ஜி.ஆர்., நினைவகம்,

கஸ்துாரி பாய் காந்தி அரசு மருத்துவமனை, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, ஆயிரம் விளக்கு, சூளைமேடு, அபிராமபுரம், பட்டினப்பாக்கம், ராயப்பேட்டை மருத்துவமனை, ஐஸ்ஹவுஸ், கோட்டூர்புரம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, மெரினா, பரங்கிமலை, நந்தம்பாக்கம், பழவந்தாங்கல்விமான நிலையம், மீனம்பாக்கம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், அடையாறு, சாஸ்திரி நகர், சைதாப்பேட்டை, குமரன் நகர், கிண்டி, வேளச்சேரி, துரைப்பாக்கம், திருவான்மியூர், தரமணி, நீலாங்கரை, மாம்பலம், கோடம்பாக்கம், வடபழநி, விருகம்பாக்கம், அசோக் நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்., நகர், பாண்டிபஜார், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், ராயலா நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X