தமிழ்நாடு

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தரமற்ற பணிகள்; வீட்டின் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

Added : அக் 11, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தரமற்ற பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு அவசியமாகிறது.2022 இறுதிக்குள் வீடில்லாத அனைவருக்கும்வீடுகள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. இதற்காக பிரதமரின் வீடுகட்டும் திட்டம் 2016 ஏப்.1 முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தரமற்ற பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு அவசியமாகிறது.

2022 இறுதிக்குள் வீடில்லாத அனைவருக்கும்வீடுகள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. இதற்காக பிரதமரின் வீடுகட்டும் திட்டம் 2016 ஏப்.1 முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முழுவீச்சில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வீடில்லாத ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படுகிறது.

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சியில் மட்டும் 20 வீடுகள் கட்டும்பணி நடக்கிறது. இதற்காகவீடு கட்டுவோரிடம் கூடுதலாக தலா ரூ.50 ஆயிரம் வாங்கிக்கொண்டதாகவும், பணிகள் தரமற்று நடப்பதாக வீட்டின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கட்டுமானப் பணிகளில் சரியான அளவில் சிமென்ட் சேர்க்காமல் கட்டுவதால் மணல் போல் உதிர்வதாகவும், ஒரு வீட்டில் ஜன்னல் சிலாப் இடிந்ததில் ராம்குமார் என்ற சிறுவன் கால் முறிந்துஉள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் பலன்இல்லை, என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வீட்டின் உரிமையாளர் முருகன் கூறுகையில்,சுவர்களை கையால் தள்ளினால் விழும் நிலையில் தான் உள்ளது. கான்கிரீட் துாண்கள் உடைந்து கம்பிகள் தெரிகின்றன. வீடுகளை கட்டி முடிப்பதற்குள் இந்த நிலை என்றால் கட்டி முடிக்கப்பட்டால் அதில் குடியிருப்போருக்கு ஆபத்து ஏற்படும், என்றார்.

மாவட்டம் முழுவதும், இதே போல் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள்தரமாக கட்டப்படுகிறதா, என்பதை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், ஊராட்சிகள் உதவி இயக்குனரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X