பொது செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தலால் வாகைக்குடி பள்ளிக்கு கிடைத்தது ரோடு

Added : அக் 11, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாகைக்குடி பள்ளிக்கு இடைத்தேர்தலால், பள்ளிக்கு செல்லும் சாலைக்கு விமோசனம் ஏற்பட்டது.ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம், ஏ.ஆர்.மங்கலம்ஊராட்சி தலைவராக இருந்த ஜெயராஜ் இறந்ததைத் தொடர்ந்து, ஏ.ஆர்.மங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வாகைக்குடி, பகவதிமங்கலம், ஆலேந்தல் ஆகிய கிராமங்களைச்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாகைக்குடி பள்ளிக்கு இடைத்தேர்தலால், பள்ளிக்கு செல்லும் சாலைக்கு விமோசனம் ஏற்பட்டது.

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம், ஏ.ஆர்.மங்கலம்ஊராட்சி தலைவராக இருந்த ஜெயராஜ் இறந்ததைத் தொடர்ந்து, ஏ.ஆர்.மங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வாகைக்குடி, பகவதிமங்கலம், ஆலேந்தல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இடைத்தேர்தலில், வாகைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வாக்களிக்க வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

பல ஆண்டுகளாக வாகைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு போதிய ரோடு வசதி இல்லாததால் வயல் வரப்பு வழியாக மாணவர்களும், ஆசிரியர்களும் வரும் நிலை இருந்தது.இடைத்தேர்தலால் அரசு அதிகாரிகள் வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரியும், ஆர்.எஸ். மங்கலம் பி.டி.ஓ.,வுமான முத்துகிருஷ்ணன், யூனியன் தலைவர் ராதிகா, ஒன்றிய கவுன்சிலர் வெங்கடாஜலபதி சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X