அலட்சிய பொறியாளர் சஸ்பெண்ட் மின் வாரியம் அதிரடி நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அலட்சிய பொறியாளர் 'சஸ்பெண்ட்' மின் வாரியம் அதிரடி நடவடிக்கை

Added : அக் 11, 2021
Share
சென்னை : மின் தடை புகார் மீது நடவடிக்கை எடுக்காத பொறியாளரை, 'சஸ்பெண்ட்' செய்து மின் வாரியம் உத்தரவிட்டுள்ளதுமின் தடை, கூடுதல் மின் கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் செயல்படுகிறது. அங்கு, 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில், 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்.அந்த புகார், சம்பந்தப்பட்ட பிரிவு

சென்னை : மின் தடை புகார் மீது நடவடிக்கை எடுக்காத பொறியாளரை, 'சஸ்பெண்ட்' செய்து மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது

மின் தடை, கூடுதல் மின் கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் செயல்படுகிறது. அங்கு, 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில், 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்.அந்த புகார், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டு, தீர்வு காணப்படும்.சென்னை தண்டையார்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட, புது வண்ணாரப்பேட்டை பிரிவு அலுவலகத்தில், மின்னகம் துவக்கிய, ஜூன், 20 முதல், இம்மாதம், 7ம் தேதி வரை, 2,360 மின் தடை புகார் பெறப்பட்ட நிலையில், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காததுடன், புகார்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், புது வண்ணாரப்பேட்டை பிரிவு அலுவலக இளநிலை பொறியாளர் சண்முகத்தை, சஸ்பெண்ட் செய்து, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X