பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு ரோடு வசதி: பாரம்பரிய வழித்தடத்தை மீட்க

Added : அக் 11, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை, திருமூர்த்திமலை பொன்னாலம்மன் சோலை முதல் குழிப்பட்டி வரை மண் ரோடு அமைத்து தர வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை அருகே, ஆனைமலைபுலிகள் காப்பகம், குருமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில், மா.கம்யூ., கட்சியின் மலைக் கமிட்டி மாநாடு நடந்தது. மலைக்கமிட்டி செயலாளர் செல்வன் தலைமை வகித்தார். இதில், வன உரிமை சட்டப்பட்டி, நிலப்பட்டா, கிராம சபை

உடுமலை:உடுமலை, திருமூர்த்திமலை பொன்னாலம்மன் சோலை முதல் குழிப்பட்டி வரை மண் ரோடு அமைத்து தர வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை அருகே, ஆனைமலைபுலிகள் காப்பகம், குருமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில், மா.கம்யூ., கட்சியின் மலைக் கமிட்டி மாநாடு நடந்தது. மலைக்கமிட்டி செயலாளர் செல்வன் தலைமை வகித்தார். இதில், வன உரிமை சட்டப்பட்டி, நிலப்பட்டா, கிராம சபை மற்றும் கோட்ட வனக்கமிட்டி பரிந்துரை படி வழங்க வேண்டும்.மலைவாழ் மக்கள், மருத்துவம், விவசாய விளை பொருட்கள், சேகரிக்கும் மலைப்பொருட்களை விற்பனை செய்யவும், உணவு பொருட்கள், கல்வி என அனைத்திற்கும், அட்டகட்டி வழியாக, 60 கி.மீ., துாரம் சுற்றி, உடுமலை வர வேண்டியுள்ளது.எனவே, திருமூர்த்திமலை, பொன்னாலம்மன் சோலையிலிருந்து, குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு செல்லும், 6 கி.மீ., துாரமே உள்ள பாரம்பரிய வழித்தடத்தில், உடனடியாக மண் ரோடு அமைத்து தர வேண்டும். மலை வாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு, அரசுத்திட்டத்தின் கீழ், கான்கிரீட் வீடுகள் ஒதுக்கீடு செய்யவும், குடிநீர் மற்றும் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். வேளாண் தொழில் நுட்பங்கள், மா, பலா, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழவகை மர நாற்றுக்களுக்கு முழு மானியம் வழங்க வேண்டும். டிராக்டர் மற்றும்வேளாண் இயந்திரங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மா.கம்யூ., மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், மதுசூதனன், மலைக்கமிட்டி உறுப்பினர்கள் மணியன், மணிகண்டன், முருகன், செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, ஆட்டுமலை, பொருப்பாறு, ஈசல்திட்டு உள்ளிட்ட, 18 மலைவாழ்மக்கள் குடியிருப்புகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X