சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' சூதாட்டத்தில் இழப்பு கம்ப்யூட்டர் இன்ஜினியர் தற்கொலை

Added : அக் 11, 2021
Share
Advertisement
வாணியம்பாடி-'ஆன்லைன்' சூதாட்டத்தில் 10 லட்சம் ரூபாய் இழந்த ஐ.டி., இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார்.உள்ளாட்சி தேர்தல்திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே புருஷோத்தமகுப்பம் காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 65; விவசாயி. இவரது மகன் ஆனந்தன், 30; சென்னை ஐ.டி., நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு

வாணியம்பாடி-'ஆன்லைன்' சூதாட்டத்தில் 10 லட்சம் ரூபாய் இழந்த ஐ.டி., இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார்.

உள்ளாட்சி தேர்தல்திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே புருஷோத்தமகுப்பம் காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 65; விவசாயி. இவரது மகன் ஆனந்தன், 30; சென்னை ஐ.டி., நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக, சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் ஆனந்தன் வந்தார்.காலை 9:00 மணிக்கு ஓட்டு போட்டார்.

அன்று மாலை வெளியே சென்ற பெற்றோர், இரவு 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்து கதவை தட்டினர்.திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்ததில், ஆனந்தன் மின் விசிறியில் துாக்கிட்டு சடலமாக தொங்கினார். வாணியம்பாடி போலீசார் விசாரித்தனர்.ஆன்லைன் மூலம், மொபைல் போனில் ரம்மி சூதாட்டத்தை ஆனந்தன் விளையாடி வந்துள்ளார். இதில், 10 லட்சம் ரூபாய் இழந்து விட்டார்.

பெற்றோரிடம் கூறியபோது, அவர்கள் கண்டித்தனர்.பெற்றோர் சத்தியம்'இனி சம்பாதிக்கும் பணத்தை, எங்களிடம் கொடுத்து விட வேண்டும், ஆன்லைன் சூதாட்டம் விளையாடக் கூடாது' என, சாமி படத்தின் முன் சத்தியம் வாங்கியுள்ளனர். பின், உறவினரை பார்க்க பெற்றோர் வெளியே சென்றனர்.ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி, விளையாட முடியாமல் மனமுடைந்த ஆனந்தன், தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது

.புது சட்டம் தேவைபா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை:ஆனந்தன் தற்கொலை மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு அப்பாவி இளைஞர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு, குறைகள் இல்லாத புதிய சட்டத்தை இயற்றுவது தான் ஒரே தீர்வு. அதை, தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால் பயனில்லை.தமிழக இளைஞர்களை காக்க, உடனே ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X