பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு முன் புதிய சம்பளம்?

Added : அக் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்-அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் என, 1.25 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை புதிய சம்பள ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது. கடந்த 2019ல், முந்தைய ஒப்பந்தம் நிறைவு பெற்றது. தற்போது வரை புதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. கடந்த செப்., மாதம், தொழிற்சங்கத்தினர் - போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ

திருப்பூர்-அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் என, 1.25 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை புதிய சம்பள ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது. கடந்த 2019ல், முந்தைய ஒப்பந்தம் நிறைவு பெற்றது. தற்போது வரை புதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. கடந்த செப்., மாதம், தொழிற்சங்கத்தினர் - போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இடையே பேச்சு நடந்தது.

ஆனால், அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொது செயலர் ஆறுமுகநயினார் கூறுகையில், ''சென்னையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்த வாரத்தில் தொழிற்சங்கத்தினரை அழைத்து பேசுவர் என எதிர்பார்த்துள்ளோம். ''இம்மாதத்துக்குள் பேசி, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை தீபாவளிக்கு முன் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X