முதுகுளத்துார் அருகே பராமரிப்பில்லாத சாலை| Dinamalar

முதுகுளத்துார் அருகே பராமரிப்பில்லாத சாலை

Added : அக் 11, 2021
Share
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கொண்டுலாவி சாலை சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.கிடாத்திருக்கை, கொண்டுலாவி கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிடாத்திருக்கையில் இருந்து கொண்டு லாவி கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை பலஆண்டுகளாக மராமத்து செய்யாததால் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கொண்டுலாவி சாலை சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

கிடாத்திருக்கை, கொண்டுலாவி கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிடாத்திருக்கையில் இருந்து கொண்டு லாவி கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை பலஆண்டுகளாக மராமத்து செய்யாததால் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் சாலையில் தண்ணீர் தேங்கி பள்ளம் இருப்பது தெரியாமல்விபத்து அபாயம் உள்ளது.நடப்பதற்கே பயனற்ற சாலையால் கிராமமக்கள் சுற்றி செல்லும் நிலை உள்ளது.கொண்டுலாவி கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலையை மராமத்து பணி செய்ய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X