ஒரு போன் போதுமே! மைதானம் சீரமைக்க வேண்டும்

Added : அக் 11, 2021
Share
Advertisement
வால்பாறை நகராட்சி விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், விளையாட்டு வீரர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் விளையாட்டு மைதானத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும்.-வே.விஜய், வால்பாறை.அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், மகாலிங்கபுரம் நுழைவுவாயில் முதல், ஆச்சிப்பட்டி வரை ரோடு குண்டும்,

வால்பாறை நகராட்சி விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், விளையாட்டு வீரர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் விளையாட்டு மைதானத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும்.-வே.விஜய், வால்பாறை.
அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?
பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், மகாலிங்கபுரம் நுழைவுவாயில் முதல், ஆச்சிப்பட்டி வரை ரோடு குண்டும், குழியுமாக மாறி உள்ளதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.எஸ்.சுலோச்சனா, பொள்ளாச்சி.
பிரதான ரோட்டில் பள்ளம்
பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு, ஆண்டிகவுண்டர் வீதி, குயவர் வீதி சந்திப்பில், பிரதான ரோட்டில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. ரோட்டை சீரமைக்க வேண்டும்.எஸ்.பூரணி, பொள்ளாச்சி.
நிழற்கூரை கட்டியது யாருக்காக?
ஆனைமலை முக்கோணம் நிழற்கூரையை மறைத்து, அரசியல் கட்சியினரின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு கடைகளும் செயல்படுவதால் மக்கள் நிழற்கூரையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கே. சதீஸ்குமார், ஆனைமலை.
நான்கு வழிச்சாலையை விட்டுடுங்க!
கிணத்துக்கடவில், நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் கீழ், நடைபாதையை மறித்து காய்கறி, மளிகை பொருள் விற்பதால், பாதசாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே நடைபாதை கடைகளை அகற்றினால், ஆக்கிரமிப்பு ஏற்படாது.வி. பாலமுருகன், கிணத்துக்கடவு.
குடிநீர் வசதியில்லை
உடுமலை தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல், காட்சிப்பொருளாக மாறியிருப்பதால், மக்கள் சிரமப்படுகின்றனர். இதை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.எஸ். சந்திரசேகர், உடுமலை.
கொசு உற்பத்தி
உடுமலை வள்ளியம்மாள் காலனிக்கு செல்லும் வழியில், ரயில்வே சுரங்க பாலத்தில், தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தியாகி வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் நோய் பரவும் வாய்ப்புள்ளது.எம். வீரக்குமார், உடுமலை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
உடுமலை பஸ் ஸ்டாண்டை ஒட்டிய ரோடுகளில், ஒருவழிப்பாதையில் இயக்கப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதைத்தீர்க்க, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர்.கண்ணன், உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை - பொள்ளாச்சி ரோடு கொல்லன்பட்டறை பஸ் நிறுத்தத்தில், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்துவதால், பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர்.ஜி.கணேசன், உடுமலை.
பாதுகாப்பு இல்லை
உடுமலை ஏரிப்பாளையத்தில் அரசு மாணவியர் விடுதி உள்ளது. இங்குள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால், பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க அரசுத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம்.முருகன், உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X