சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை எரித்து கொன்றது ஏன்? கைதான கணவர் 'திடுக்' வாக்குமூலம்!

Added : அக் 11, 2021
Share
Advertisement
திருப்பத்துார்-கள்ளக்காதலியுடன் வாழ்வதற்காக, மனைவியை எரித்துக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.திருப்பத்துார் மாவட்டம், பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 30; திருப்பத்துாரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா, 24. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு வர்ஷினிஸ்ரீ, 3, என்ற பெண் குழந்தை உள்ளது.குழந்தையுடன்

திருப்பத்துார்-கள்ளக்காதலியுடன் வாழ்வதற்காக, மனைவியை எரித்துக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பத்துார் மாவட்டம், பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 30; திருப்பத்துாரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா, 24. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு வர்ஷினிஸ்ரீ, 3, என்ற பெண் குழந்தை உள்ளது.குழந்தையுடன் ஓட்டம்கடந்த மாதம் 25ம் தேதி திவ்யாவை பெட்ரோல் ஊற்றி எரித்து, சாலையோரம் வீசிவிட்டு சத்தியமூர்த்தி தப்பிச் சென்றார்.

மறுநாள் மருத்துவமனையில் திவ்யா உயிரிழந்தார்.கந்திலி போலீசார் விசாரணையில், குழந்தை மற்றும் கள்ளக்காதலியுடன் சத்தியமூர்த்தி தஞ்சாவூரில் பதுங்கியிருந்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.சத்தியமூர்த்தி வாக்குமூலம்:திருப்பத்துாரில் நான் நடத்தி வந்த ஓட்டுனர் பள்ளியில், பயிற்சிக்கு வந்த சென்னையில் நர்சிங் படிக்கும் அர்ச்சனா, 21, என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த திவ்யா, கள்ளக்காதலை கைவிடாவிட்டால், போலீசில் புகார் செய்யப் போவதாக கூறினார்.இதனால், அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக, என் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டதாக நாடகமாடி, சில நாட்கள் அவருடன் ஜாலியாக இருந்தேன்.

உல்லாச பயணம்

பின், கோவிலுக்கு செல்வதாக எலவம்பட்டிக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன்.மயங்கி விழுந்த அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, குழந்தையோடு சென்னைக்கு சென்று, கள்ளக்காதலி அர்ச்சனாவுடன் கொடைக்கானல், ஊட்டி, திருச்சியில் உல்லாசமாக சுற்றித் திரிந்தேன்.தஞ்சாவூரில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த போது, போலீசார் பிடித்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.கைதான சத்தியமூர்த்தி, வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். அவரது குழந்தை, திருப்பத்துாரில் உள்ள குழந்தைகள் காப்பகத்திலும், கள்ளக்காதலி அர்ச்சனா, பெண்கள் இல்லத்திலும் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X