பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் முப்பெரும் விழா

Added : அக் 11, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அடுத்த பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர் சந்திப்பு, சர்வதேச விண்வெளி வார விழா மற்றும் துாய்மை பாரத இயக்கம் என, முப்பெரும் விழா நடந்தது.தலைமையாசிரியர் கண்ணகி, தலைமை வகித்தார். முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன், வரவேற்றார். இதையடுத்து, ஊராட்சித்தலைவர் ராதிகா, முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளிக்கு, மின்சார தானியங்கி

உடுமலை:உடுமலை அடுத்த பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர் சந்திப்பு, சர்வதேச விண்வெளி வார விழா மற்றும் துாய்மை பாரத இயக்கம் என, முப்பெரும் விழா நடந்தது.தலைமையாசிரியர் கண்ணகி, தலைமை வகித்தார். முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன், வரவேற்றார். இதையடுத்து, ஊராட்சித்தலைவர் ராதிகா, முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளிக்கு, மின்சார தானியங்கி மணியை வழங்கினார்.முன்னாள் மாணவர் கண்ணப்பன், எதிர்கால கல்வி வாய்ப்புகள் என்ற தலைப்பில் பேசினார். இதேபோல், ஆசிரியர் ரத்தினசாமி, 'விண்வெளி அற்புதங்கள்' தலைப்பில் விளக்கினார். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியர்கள் கண்ணபிரான், செந்தில்குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X