பொது செய்தி

தமிழ்நாடு

செயலிழந்த கிட்னி: உயிருக்கு போராடும் ஆசிரியர்: அமைச்சரிடம் பெற்றோர் மனு

Added : அக் 11, 2021
Share
Advertisement
பரமக்குடி- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தோளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 32. இவர் பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆசிரியராக பணியில் உள்ளார்.ஆசிரியருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ராஜசேகருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போது, அவரது இரண்டு

பரமக்குடி- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தோளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 32. இவர் பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆசிரியராக பணியில் உள்ளார்.ஆசிரியருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

ராஜசேகருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போது, அவரது இரண்டு கிட்னியும் செயல் இழந்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.விவசாய பணியில் உள்ள பெற்றோர் பஞ்சவர்ணம், இருளாயி தவிப்புக்குள்ளாகின்றனர்.தொடர்ந்து நேற்று பரமக்குடிக்கு தடுப்பூசி முகாமை பார்வையிட வந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியத்திடம், ராஜசேகரின் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

பெற்றோர் கூறுகையில்: ஆசிரியராக உள்ள எனது மகனுக்கு திடீரென கிட்னி செயல் இழந்தது தெரியவந்தது. எங்கள் இருவருக்கும் சர்க்கரை உள்ளிட்ட வியாதி உள்ளதால் எங்களது கிட்னியை கொடுக்க முடியாத சூழல் உள்ளது. தற்போது அமைச்சரிடம் மனு அளித்த நிலையில் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X