தமிழ்நாடு

ஏழாம் கட்ட அகழாய்வு; தொல்லியல் துறை அலட்சியம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
திருப்புவனம் : தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து முடிந்த ஏழாம் கட்ட அகழாய்வு குறித்த எந்தவித விளக்கமும் அதிகாரிகள் தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.2021 பிப்ரவரி 13ம் தேதி கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட நான்கு தளங்களில் அகழாய்வு பணிகள் தொடங்கின. தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன் தொல்லியல் அலுவலர்கள் சுரேஷ், ரமேஷ், அஜய், காவ்யா,

திருப்புவனம் : தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து முடிந்த ஏழாம் கட்ட அகழாய்வு குறித்த எந்தவித விளக்கமும் அதிகாரிகள் தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது

.2021 பிப்ரவரி 13ம் தேதி கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட நான்கு தளங்களில் அகழாய்வு பணிகள் தொடங்கின. தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன் தொல்லியல் அலுவலர்கள் சுரேஷ், ரமேஷ், அஜய், காவ்யா, தலைமையில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டனர்.

வெள்ளி முத்திரை நாணயம், தந்த பகடை, சிவப்பு நிற கொள்கலன், உறைகிணறுகள், புகை பிடிப்பான், சுடுமண் பொம்மைகள் உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக 40 நாட்களுக்கும் மேலாக அகழாய்வு பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழக அரசு கீழடி அகழாய்விற்காக 52 லட்சம் ரூபாய் ஒதுக்கியது.

மேலும் நிதி ஒதுக்கவும் முடிவு செய்திருந்தது. செப்டம்பருடன் அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றதுடன் இதுவரை கண்டறியப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதுவரை தொல்லியல் துறை சார்பில் அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் குறித்த எந்த ஒரு விளக்கம், பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெறவில்லை.

அமைச்சர் தங்கம் தென்னரசு தனது வலைதளப்பக்கத்தில் சில பொருட்கள் குறித்து படத்துடன் வெளியிட்டிருந்தார். உலக அளவில் புகழ் பெற்ற கீழடி அகழாய்வு குறித்து இதுவரை நடந்த ஆறு கட்ட அகழாய்வில் பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஏழாம் கட்ட அகழாய்வு குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் தொல்லியல் துறை வெளியிடாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு இதுவரை நடந்த அகழாய்வை விட ஏழாம் கட்ட அகழாய்விற்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் குறைந்த அளவிலான குழிகளே தோண்டப்பட்டு பணிகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X