பிரதமர் கிஷான் நிவாரண நிதி இழுபறி; தாயமங்கலம் விவசாயிகள் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் கிஷான் நிவாரண நிதி இழுபறி; தாயமங்கலம் விவசாயிகள் புகார்

Added : அக் 11, 2021
Share
சிவகங்கை : இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு பிரதமர் கிஷான் திட்ட நிவாரண நிதியின் 2 ம் தவணை நிதி வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம், நாகமுகுந்தன்குடி, தடியமங்கலம், கலைக்குளம், காரைக்குளம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 500 விவசாயிகளுக்கு தாயமங்கலம் தேசிய வங்கி மூலம் பிரதமரின் கிஷான்

சிவகங்கை : இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு பிரதமர் கிஷான் திட்ட நிவாரண நிதியின் 2 ம் தவணை நிதி வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம், நாகமுகுந்தன்குடி, தடியமங்கலம், கலைக்குளம், காரைக்குளம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 500 விவசாயிகளுக்கு தாயமங்கலம் தேசிய வங்கி மூலம் பிரதமரின் கிஷான் திட்டத்தில் நிவாரண உதவி வழங்குகின்றனர். ஆண்டுக்கு ரூ.6000யை ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணையாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தாயமங்கலம் வங்கியில் கணக்கு வைத்துள்ள 500 விவசாயிகளுக்கு ஆகஸ்ட்டில் வழங்க வேண்டிய பிரதமர் கிஷான் நிவாரண தொகை ரூ.2000 வரவு வைக்கவில்லை. விவசாயிகள் வங்கியில் கேட்டால் பணம் ஒதுக்கவில்லை என தெரிவிக்கின்றனர். இதனால் பிரதமரின் நிவாரண உதவி கிடைக்காமல் தவிப்பதாக தாயமங்கலம் விவசாயி செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.

வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஷ்வரன் கூறியதாவது, பிரதமர் கிஷான் திட்ட இணைய தளத்தில் மாற்றம் செய்யும் பணி தமிழக அளவில் நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X