பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை சிறப்பு முகாமில் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

Added : அக் 11, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் மதியம் 2:00 மணி வரை 25 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.கொரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஞாயிறு தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் 750 முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்த பின் அவர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் மதியம் 2:00 மணி வரை 25 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஞாயிறு தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் 750 முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்த பின் அவர் தெரிவித்ததாவது:

மாவட்டத்தில் 71 ஆயிரத்து 260 டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது. நேற்று மதியம் 2:00மணி வரை 25 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை ஆறு லட்சத்து 79 ஆயிரத்து 525 நபர்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இரண்டாவது தவணையாக ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 442 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 லட்சத்து 70 ஆயிரம் பேர் உள்ளனர்.

8 லட்சத்து 70 ஆயிரத்து 967 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். வீட்டிலிருந்து சிறப்பு முகாம்களுக்கு வர முடியாத முதியவர், மாற்றுத்திறனாளிகளுக்கு நடமாடும் தடுப்பூசி வாகனம் மூலம் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அனைவரும் ஒருங்கிணைந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். நுாறு சதவீதம் தடுப்பூசி போடநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

ராம்கணேஷ், சுகாதாரத்துறை துணை இயக்குநர்: நேற்று மதியம் வரை 25 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 68 ஆயிரம் பேருக்கு போட இலக்கு நிர்ணயம் செய்து பணிபுரிந்தோம், என்றார். இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், நகராட்சி கமிஷனர் ராஜேஸ்வரன், நகர்நல மருத்துவர் கலா, வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர்கள் துளசிராம், கோதண்டம், முருகேசன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X