தமிழ்நாடு

யூரியா, டி.ஏ.பி.,க்கு தட்டுப்பாடு!

Added : அக் 11, 2021
Share
Advertisement
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய்களில் நீர் நிறைந்து வருகிறது. இந் நிலையில் விவசாயிகள் 2 லட்சம் ஏக்கரில் நெல் விதைப்பு, நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் யூரியாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது நிலத்திற்கு அடியுரமாக போடும் டி.ஏ.பி.,க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய்களில் நீர் நிறைந்து வருகிறது. இந் நிலையில் விவசாயிகள் 2 லட்சம் ஏக்கரில் நெல் விதைப்பு, நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் யூரியாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது நிலத்திற்கு அடியுரமாக போடும் டி.ஏ.பி.,க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உரம் வாங்க செல்லும் விவசாயிகளிடம் உரம் இல்லை என்றும் அதற்கு மாற்றாக பொட்டாஷ் போடும்படியும் தெரிவிக்கின்றனர். பல இடங்களில் விவசாயிகளை அலைக்கழிப்பு செய்வதாக கூறுகின்றனர்.

ஆறுமுகம்,விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தெரிவித்ததாவது: திருப்புத்துார் பகுதியில் உள்ள ஆலம்பட்டு, கூத்தனுார், பட்டமங்கலம் உள்ளிட்ட பல தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு இல்லை என்றே தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக நெல் விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது. மழைக்கு முன்பாக விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்பு வைத்திட வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண்துறை சார்பில் டி.ஏ.பி., 800 டன் இருப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் விவசாயிகள் இன்றுவரை வேளாண் தொடக்க கூட்டுறவு சங்கங்களால் அலைக்கழிப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X