பொது செய்தி

தமிழ்நாடு

போதை பொருள் விற்பனை வாயிலாக பயங்கரவாத செயலுக்கு பாயும் நிதி!

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோவை-கோவை உட்பட நாடு முழுதும் போதைப் பொருள் விற்பனை மூலம், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டப்படுவதாக தகவல் வெளியாகிஉள்ளது.குஜராத், முந்த்ரா துறைமுகத்தில் சில நாட்களுக்கு முன், 3,000 கிலோ 'ஹெராயின்' போதைப் பொருள் பிடிபட்டது. 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த போதைப் பொருள், ஆப்கனில் இருந்து ஈரானுக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து குஜராத் துறைமுகம் வழியாக

கோவை-கோவை உட்பட நாடு முழுதும் போதைப் பொருள் விற்பனை மூலம், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டப்படுவதாக தகவல் வெளியாகிஉள்ளது.



latest tamil news


குஜராத், முந்த்ரா துறைமுகத்தில் சில நாட்களுக்கு முன், 3,000 கிலோ 'ஹெராயின்' போதைப் பொருள் பிடிபட்டது. 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த போதைப் பொருள், ஆப்கனில் இருந்து ஈரானுக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து குஜராத் துறைமுகம் வழியாக இந்தியாவுக்குள் வந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த சுதாகர், 45; அவரது மனைவி துர்கா, 39, கோவை, வடவள்ளியைச் சேர்ந்த ராஜ்குமார், 45, உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டு, நேற்று முன்தினம் சுதாகரின் சென்னை வீடு உட்பட இரு இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவையில் உள்ள ராஜ்குமார் வீட்டிலும் மூன்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் குழுவினர், ஆறு மணி நேரம் சோதனை நடத்தினர். ராஜ்குமாரின் தாயிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ராஜ்குமார் வீட்டில் இருந்த மொபைல் போன்கள், லேப்டாப் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.இந்த ஆவணங்களை வைத்து ராஜ்குமாருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர்; அவர்களுக்கும், சர்வதேச போதை கடத்தல் கும்பலுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருகின்றனர். கோவை உட்பட நாடு முழுதும், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை மூலம், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news


இதற்கு, நாடு முழுதும் சிலர் குழுக்களாக இணைந்து உடந்தையாக இருந்து வருவதால், என்.ஐ.ஏ., தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.டில்லி, மும்பை, சென்னை, கோவை, கோவா உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், கடல் வழியாக கடத்தல் முயற்சி நடந்துள்ளதால், சந்தேக வலையில் உள்ள நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகள், இறக்குமதி பொருட்கள் போன்ற தகவல்களை திரட்டி விசாரணை நடத்தப்படுகிறது.

என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறுகையில், 'சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல், இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் கடத்தல் வலை பின்னிஉள்ளது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. 'தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்கப்படுகிறது' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
11-அக்-202122:53:57 IST Report Abuse
Vittalanand டாஸ் மாக் சரக்கோடு இதையும் விற்றால் பேபிகளுக்கு வாரம் 1000 ரூபாய் கொடுக்கலாம்.
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
11-அக்-202110:56:49 IST Report Abuse
Charles முழுமையாக ஒழிக்கப்படவேண்டும் கேரளா தங்க கடத்தல் போல் புஷ்வாணமாகி விடக்கூடாது செய்தியை கேட்கவே அதிர்வாக உள்ளது
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
11-அக்-202110:39:55 IST Report Abuse
duruvasar கள்ளத்தொடர்பு வச்சுக்கிட்டாத்தான் எய்ட்ஸ் வருதாம் . ரெட் லைட் தொழிலை அரசுடைமை ஆக்கிடலாமா அப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X