பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.17.89 லட்சம் விதிமுறை மீறிய வாகனங்களுக்கு அபராதம்...வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அதிரடி

Added : அக் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் மோட்டார் வாகன விதிமுறை மீறிய வாகனங்களுக்கு வரி மற்றும் அபராத தொகையாக 17 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வசூலித்தனர்.விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் வாகன விதிமுறை மீறி செல்லும் இரு சக்கர, நான்கு சக்கர, கனரக மற்றும் சரக்கு வாகனங்களை கண்காணிக்கும்

விழுப்புரம் : விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் மோட்டார் வாகன விதிமுறை மீறிய வாகனங்களுக்கு வரி மற்றும் அபராத தொகையாக 17 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வசூலித்தனர்.

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் வாகன விதிமுறை மீறி செல்லும் இரு சக்கர, நான்கு சக்கர, கனரக மற்றும் சரக்கு வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.உரிய ஆவணங்கள் இன்றியும், பர்மிட் இன்றி விதிமுறை மீறி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, உரிய அபராதமும் விதிக்கின்றனர்.வட்டார போக்குவரத்து துணை ஆணையர் நெல்லையப்பன் உத்தரவின் பேரில், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர்.இதன் மூலம் 206 வாகனங்களை சோதனை செய்து, அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதில், மோட்டார் வாகன விதிமுறை மீறி அதிக பாரம் ஏற்றிச் சென்ற கனரக சரக்கு வாகனங்கள், வரி செலுத்தாத வாகனங்கள், ஜே.சி.பி., ஆகியவை பிடிக்கப்பட்டது.

இதன் மூலம் அரசுக்கு வரி மற்றும் அபராத தொகையாக 10 லட்சத்து 29 ஆயிரத்து 400 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இது மட்டுமின்றி, டூரிஸ்ட் கார், மகேந்திரா கேப், ஆட்டோக்கள் என விதிமுறை மீறி அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றது என 7 லட்சத்து 59 ஆயிரத்து 600 ரூபாய் என மொத்தம் 17 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா மேம்பாட்டு வளர்ச்சிக்கு வழங்கிய பர்மிட்டைக் கொண்டு, பலர் மோட்டார் வாகன விதிமுறை மீறி சட்டத்திற்கு புறம்பாக வாகனங்கள் இயக்குவதாக புகார்கள் வந்துள்ளது.அதன் பேரில், நேற்று முன்தினம் மதியம் 1:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் வாகன தணிக்கைக்கான சிறப்பு சோதனை செய்தனர்.

அதில், சென்னையில் இருந்து மதுரை, கோவை நோக்கிச் சென்ற, புதுச்சேரி மாநில வாகனங்கள் இரண்டு விதிமுறை மீறிச் சென்றதை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வாகனங்களுக்கு வரி மற்றும் அபராத தொகை என ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் விதித்தனர்.தொடர்ந்து, சுற்றுலா பர்மிட் பெயரில் விதிமுறை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X