இறந்தவர்களின் உடலை வெள்ளாற்றில் எரிக்கும் மக்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறந்தவர்களின் உடலை வெள்ளாற்றில் எரிக்கும் மக்கள்

Added : அக் 11, 2021
Share
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார் ஊராட்சி பொன்னங்கோவில் கிராமத்தில் சுடுகாடு இல்லாததால் இறந்தவர்களின் உடலை எரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார் ஊராட்சியில் உள்ள பொன்னங்கோவில் குக்கிராமத்தில் பல ஆண்டுகளாக சுடுகாடு வசதி இல்லை. இந்த கிராமத்தில் இறப்பு ஏற்பட்டால் கிராம மக்கள் வெள்ளாற்றில் பிணத்தை எரித்தும்,

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார் ஊராட்சி பொன்னங்கோவில் கிராமத்தில் சுடுகாடு இல்லாததால் இறந்தவர்களின் உடலை எரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார் ஊராட்சியில் உள்ள பொன்னங்கோவில் குக்கிராமத்தில் பல ஆண்டுகளாக சுடுகாடு வசதி இல்லை. இந்த கிராமத்தில் இறப்பு ஏற்பட்டால் கிராம மக்கள் வெள்ளாற்றில் பிணத்தை எரித்தும், புதைத்தும் வருகின்றனர். மழைக் காலங்களில் கிராம மக்கள் பிணத்தை எரிக்க முடியமால் பெரிதும் பாதிக்கின்றனர். கிராமத்தில் சுடுகாடு கொட்டகை, ஈமச்சடங்கு நடத்த கட்டட வசதிகள் ஏதும் அரசு ஏற்படுத்தித் தரவில்லை. நேற்று முன்தினம் கிராமத்தில் ஏற்பட்ட இறப்பில் பிணத்தை கொண்டு சென்று வெள்ளாற்றில் வைத்து எரிக்கும் போது சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் திறக்கப்பட்ட தண்ணீர் வந்தது.

இதனால் அந்த பகுதி இளைஞர்கள் எரிந்த பிணத்தை எடுத்து மேடான இடத்தில் வைத்து எரித்தனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தில் சுடுகாடு இல்லை. சுடுகாட்டிற்கான புறம்போக்கு இடத்தையும் ஆக்கிரமித்து விவசாய பணிகள் செய்து வருகின்றனர். இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X