பொது செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை

Added : அக் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம் : சிறுபான்மையினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22ம் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில்,

விழுப்புரம் : சிறுபான்மையினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22ம் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில், மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் புத்தமதத்தினர் பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள் பயனடையலாம்.

மேலும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி படிப்பவர்களுக்கும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதைப்பெற மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு நவம்பர் 15ம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு நவம்பர் 30ம் தேதி வரையிலும் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இத்திட்டம் தொடர்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X