பொது செய்தி

தமிழ்நாடு

பரிசுக்கு டோக்கன் வழங்கியதால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த 5ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில், பரிசு டோக்கன் வழங்கியதால், அதிகளவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.திண்டிவனம் நகராட்சி சார்பில் நேற்று 53 இடங்களில் 5ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இதுவரை நடந்த 4 முகாம்களில், 9,578 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.திண்டிவனம் முஸ்லிம் நடுநிலைப்பள்ளி எதிரே நடந்த

திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த 5ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில், பரிசு டோக்கன் வழங்கியதால், அதிகளவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

திண்டிவனம் நகராட்சி சார்பில் நேற்று 53 இடங்களில் 5ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இதுவரை நடந்த 4 முகாம்களில், 9,578 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.திண்டிவனம் முஸ்லிம் நடுநிலைப்பள்ளி எதிரே நடந்த சிறப்பு முகாமை, கமிஷனர் சவுந்தர்ராஜன் துவக்கி வைத்தார். இதில், நகராட்சி துப்புரவு அலுவலர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். நேற்று நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்தாமல் உள்ள பொது மக்கள் பங்கேற்கும் வகையில், நகராட்சி சார்பில் முன்கூட்டியே வீடு, வீடாகச் சென்று பரிசு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் அதிக அளவில் பொது மக்கள் பரிசு டோக்கனை முகாமில் வழங்கி தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.இன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, தேர்வானவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X