பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா பாதிப்பை முதல்வர் குறைத்துள்ளார்' அமைச்சர் கணேசன் பெருமிதம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
சிறுபாக்கம் : திறம்பட செயல்பட்டு கொரோனா தொற்று பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் குறைத்தார் என அமைச்சர் கணேசன் பேசினார். சிறுபாக்கம் அடுத்த வள்ளிமதுரம் மற்றும் பனையாந்துார் ஊராட்சிகளில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை, அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார். மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் விவேக், பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, தண்டபாணி முன்னிலை வகித்தனர். தி.மு.க., இளைஞரணி


சிறுபாக்கம் : திறம்பட செயல்பட்டு கொரோனா தொற்று பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் குறைத்தார் என அமைச்சர் கணேசன் பேசினார். சிறுபாக்கம் அடுத்த வள்ளிமதுரம் மற்றும் பனையாந்துார் ஊராட்சிகளில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை, அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.

மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் விவேக், பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, தண்டபாணி முன்னிலை வகித்தனர். தி.மு.க., இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பாண்டுரங்கன், ஒன்றிய செயலர்கள் செங்குட்டுவன், சின்னசாமி, அமிர்தலிங்கம், திட்டக்குடி பேரூராட்சி செயலர் பரமகுரு, ஊராட்சி தலைவர்கள் சுப்ரமணியன், கண்ணகி, தி.மு.க., நிர்வாகிகள் சங்கர், ராமச்சந்திரன், திருவள்ளுவன், ராமதாஸ், குமணன், சேகர், மருதமுத்து, செல்வராஜ், ராமலிங்கம், ராமசாமி, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசுகையில் , தமிழகத்தில் நாள்தோறும் 40 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதித்த சூழலில், முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளை விதித்தும், தரமான சிகிச்சைகள் அளித்தும், சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தி, கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தினார். ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி, பல இடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டு, தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்றார். திட்டக்குடி ராமநத்தம் அடுத்த வடகராம்பூண்டி, கொரக்கவாடி ஊராட்சிகளில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்துப் பேசினார்.

மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் மீரா, சப் கலெக்டர்(பொ)செல்லபாண்டி, திட்டக்குடி தாசில்தார் தமிழ்செல்வி, மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் விவேக் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X