பொது செய்தி

தமிழ்நாடு

மண்புழு உரம் தயாரிக்க மானியம்: தோட்டக்கலைத்துறை தகவல்

Added : அக் 11, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மண்புழு உரம் தயாரிக்க, மானியம் வழங்குவதாக, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் திவ்யா வெளியிட்ட அறிக்கை:மத்திய மாநில அரசுகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மண்புழு உரம் தயாரிக்க, 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.மடத்துக்குளம் வட்டாரத்தில், 15 விவசாயிகளுக்கு ஆறு ஆயிரம் ரூபாய் வீதம், 90 ஆயிரம்

மடத்துக்குளம்:மண்புழு உரம் தயாரிக்க, மானியம் வழங்குவதாக, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் திவ்யா வெளியிட்ட அறிக்கை:மத்திய மாநில அரசுகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மண்புழு உரம் தயாரிக்க, 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.மடத்துக்குளம் வட்டாரத்தில், 15 விவசாயிகளுக்கு ஆறு ஆயிரம் ரூபாய் வீதம், 90 ஆயிரம் ரூபாய் பின்னேற்பு மானியமாக கொடுக்கப்படுகிறது.மண்புழு உரங்கள் பயன்படுத்துவதால், மண்ணின் கட்டமைப்புத்திறன், காற்றோட்டம் மற்றும் நீர் பிடிப்புத்திறன் மேம்படுத்தப்படுகிறது.மண்புழு உரம் தயாரிக்க பண்ணைக்கழிவுகள், காய்கறி கழிவுகள், இலைகள், சருகுகள், விலங்கு கழிவுகள், வேளாண் சார்ந்த ஆலைக்கழிவுகள், தென்னை நார்க்கழிவுகளை பயன்படுத்தலாம்.மண்புழு உரம் தயாரிக்க, கால்நடை கழிவுகளை சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும். மற்ற கழிவுகளை சாணத்துடன் கலந்து, 20 நாட்களுக்கு வைத்திருந்து, பின்பு உரம் தயாரிக்க வேண்டும்.இரண்டரை ஏக்கரில் இடப்படும், 5 டன் மண்புழு உரத்தில், 75 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து உள்ளது. இது, 160 கிலோ யூரியா 156 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 60 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் உரங்களுக்கு இணையானது.மானியம் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், உரிமைச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 ஆகியவற்றுடன் அலுவலகத்தை அணுகலாம்.கூடுதல் விவரங்களுக்கு, தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் -96598 38787, பிரபாகரன் - 75388 77132 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X