தமிழ்நாடு

கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் நோ யூஸ்

Added : அக் 11, 2021
Share
Advertisement
காரியாபட்டி : கிராம சபை கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற நிதி ஆதாரம் இல்லாததால், வளர்ச்சி பணிகள் நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. தீர்மானங்கள் ஏட்டளவில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அக். 2ல் ஊராட்சிகள் தோறும் கிராமசபை கூட்டம் நடந்தது. வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பாலான

காரியாபட்டி : கிராம சபை கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற நிதி ஆதாரம் இல்லாததால், வளர்ச்சி பணிகள் நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. தீர்மானங்கள் ஏட்டளவில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அக். 2ல் ஊராட்சிகள் தோறும் கிராமசபை கூட்டம் நடந்தது. வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பாலான ஊராட்சிகளில் வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. அது போக சாக்கடை சுத்தம் செய்வது, குடிநீர் பிரச்னை, ரோடு வசதி, தெருவிளக்கு, டெங்கு காய்ச்சல் பரவுவதால் கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளுக்கான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

ஆனால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் ஏட்டளவில்தான் உள்ளன. நிதி ஆதாரம் இல்லாததால் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை. இதற்கான நிதியை மாவட்ட நிர்வாகம் தான் வழங்க வேண்டும்.............

கோரிக்கையை நிறைவேற்றுங்க

கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் தேவையான நிதி ஆதாரங்களை வழங்கி ,மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.சித்துராமன், சமூக ஆர்வலர், சத்திரம் புளியங்குளம்.................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X