பொது செய்தி

தமிழ்நாடு

10 ஆயிரம் பனை விதைகள்; தனி ஒருவரால் சாதிப்பு

Added : அக் 11, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டைமரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை என்பது இன்றைய கால மனிதர்களுக்கு தெரியவில்லை. நம் முன்னோர்கள் தெளிவாக புரிந்து மரங்களை வளர்த்தனர். பனைமரத்தை 'கற்பக விருட்சம்' என அழைத்தனர். பனை தமிழர்களின் அடையாளமாக இருந்தது.உணவு மட்டும் அல்ல. நம் உணர்வு நிலையில் கூட முன்னோர்கள் பனைமரத்துடன் இணைந்து இருந்தனர். பனை புல்லினத்தை சேர்ந்த தாவரம். பனை மரங்களில் 34 வகைகள்

அருப்புக்கோட்டை

மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை என்பது இன்றைய கால மனிதர்களுக்கு தெரியவில்லை. நம் முன்னோர்கள் தெளிவாக புரிந்து மரங்களை வளர்த்தனர். பனைமரத்தை 'கற்பக விருட்சம்' என அழைத்தனர். பனை தமிழர்களின் அடையாளமாக இருந்தது.உணவு மட்டும் அல்ல. நம் உணர்வு நிலையில் கூட முன்னோர்கள் பனைமரத்துடன் இணைந்து இருந்தனர். பனை புல்லினத்தை சேர்ந்த தாவரம். பனை மரங்களில் 34 வகைகள் உள்ளன. முன்பு பனை மரப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டு தோறும்ரூ. 200 கோடி அந்நியசெலாவணி கிடைத்ததாக புள்ளி விபரம் கூறுகிறது.ஆனால் இன்றைக்கு பனை மரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.

பனை மரம் முழுவதும் மக்களுக்கு நன்மை செய்கின்றன. உணவாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது.பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்காக லட்சக் கணக்கில் அழிக்கப்பட்டு விட்டன. இதை காக்க பனை மரங்களை வெட்ட அரசு தடை விதித்து இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பனைமரங்கள் அழிந்து வரும் நிலையில் அதன் இனம் காக்க அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஜவஹர் பனை மரங்களை வளர்க்க ஆதிக ஆர்வம் காட்டி வருகிறார்.தனது சொந்த செலவில 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை ஊரின் பல பகுதிகள், நீர்நிலைகள், பொது இடங்கள், பள்ளிகள் என பார்க்கும் இடங்களில் எல்லாம் நட்டு அதை வளர்க்கிறார்.

தற்போது ஊரில் உள்ள கண்மாய், ராமசாமிபுரம் கண்மாய் கரைகளில் 10 ஆயிரம் பனை விதைகளை சொந்த செலவில் ஊன்றி பராமரித்தும் வருகிறார். இதற்காக கண்மாய்கரை பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றி வரிசையாக பனை விதைகளை நட்டுள்ளார். வேலைக்கு ஆட்களை வைத்தும் தனி ஒருவராக சாதித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X