சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : அக் 11, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: அரசியலில் 56 ஆண்டுகள் கஷ்டப்பட்டு விட்டேன். ஐந்தரை ஆண்டுகள் சிறை, நடைபயணம், போராட்டங்கள் என வாழ்க்கையை அழித்துக் கொண்டேன்; இந்த கஷ்டம் என்னோடு போகட்டும். என் மகன் துரை வைகோ, அரசியலுக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம் என்பதால் விரும்பவில்லை.'டவுட்' தனபாலு: தமிழக அரசியலில் அப்பழுக்கற்ற அரசியல்வாதிகளில் நீங்களும் ஒருவர் என்பதில்,
 'டவுட்' தனபாலு

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: அரசியலில் 56 ஆண்டுகள் கஷ்டப்பட்டு விட்டேன். ஐந்தரை ஆண்டுகள் சிறை, நடைபயணம், போராட்டங்கள் என வாழ்க்கையை அழித்துக் கொண்டேன்; இந்த கஷ்டம் என்னோடு போகட்டும். என் மகன் துரை வைகோ, அரசியலுக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம் என்பதால் விரும்பவில்லை.

'டவுட்' தனபாலு: தமிழக அரசியலில் அப்பழுக்கற்ற அரசியல்வாதிகளில் நீங்களும் ஒருவர் என்பதில், நடுநிலையாளர்களுக்கு, 'டவுட்'டே இல்லை. எனினும், இலங்கை விவகாரம், எல்லாவற்றிலும் தமிழ், வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போன்ற சில கொள்கைகளால் எடுபடாமல் போய் விட்டீர்களோ... அதுபோல, சேராத இடத்தில் கூட்டணி சேர்ந்ததும், உங்கள் புகழ் மங்க காரணமாக இருக்குமோ!lll

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: அரசியல் அதிகாரம் நிலையில்லாதது. பிரியாணி கடை முதல் டீக்கடை வரை, தி.மு.க.,வின் அராஜகத்தை, தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்து உள்ளனர். தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தாலும் வன்முறையில் ஈடுபடுகிறது; ஆளுங்கட்சியாக வந்த பிறகும், அதே பழக்கத்தை தொடர்கிறது.'டவுட்' தனபாலு: தி.மு.க.,வை பற்றி நன்கு மக்கள் அறிந்திருந்தால், மீண்டும் எப்படி ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்திருப்பர் என்ற, 'டவுட்' எழுகிறதே. நீங்கள் சொல்வது படி பார்த்தால், கட்சியின் மேலிடம் நன்றாக இருக்கிறது. கீழ்மட்டத்தில் இன்னும் பலர் வன்முறை கலாசாரத்தை தான் பின்பற்றுகின்றனரோ என்ற, டவுட் ஏற்படுகிறதே!lll

தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி: காங்கிரசின் தலைவர்கள் சோனியாவும், ராகுலும் தான். விரும்பும் வரை அவர்கள் தான் தலைவர்கள். காமராஜர் காலத்தில், சி.சுப்பிரமணியம், பா.ராமச்சந்திரன் தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்தனர். எனினும், எங்கு சென்று கேட்டாலும் காமராஜரை தான் காங்கிரஸ் தலைவர் எனச் சொல்வர். உள்ளே நுழைக்கப்படுபவர்கள் எல்லாம் தலைவர்களாகி விட முடியாது.'

டவுட்' தனபாலு: காங்கிரஸ் எழ முடியாமல், நாளுக்கு நாள் நொய்ந்து போவதற்கு, இந்த விடாப்படி எண்ணம் தான் காரணமாக இருக்குமோ என்ற, 'டவுட்' தமிழக மக்களுக்கு வருகிறது. எத்தனையோ பெரிய தலைவர்கள் இருந்த காங்கிரசில் இப்போது, ராகுல், சோனியாவை விட்டால் ஆளே கிடையாதோ என்ற நிலை ஏற்பட்டு விட்டது சோகம் தான்!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-அக்-202118:37:51 IST Report Abuse
D.Ambujavalli பெரிய இடத்தின் ஆசி, தேர்தல் முடிவுகள் வந்த அன்றே தெரிய ஆரம்பித்துவிட்டதே அந்த தைரியத்தில் ஆட்ட பட்டம் அலப்பறைகள், குற்றங்கள் எல்லாம் கட்டவிழ்த்து விட்டாயிற்று கீழ் மட்டம் தன்னிச்சையாகவே ஆடாது
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
11-அக்-202116:26:05 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\ஐந்தரை ஆண்டுகள் சிறை, நடைபயணம், போராட்டங்கள் என வாழ்க்கையை அழித்துக் கொண்டேன் \\ ..... அந்த தியாகத்துக்கெல்லாம் பரிசாதான் ராஜ்ய சபா MP பதவி, மக்கள் கூட்டணி அமைத்ததிற்கு பெட்டி எல்லாம் கிடைச்சுதே .... அப்பறம் எப்படி வாழ்க்கையை அழித்துகொண்டிருக்கமுடியும் ??
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
11-அக்-202116:22:27 IST Report Abuse
Suppan புலிகளிடமிருந்து பணவரத்து நின்றுவிட்டது? குன்றிய அரசும் கண்டுகொள்ளவில்லை. திருமா ஓரம் கட்டப்பட்டுவிட்டாயிற்று. அடுத்து கோபால்சாமிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X