பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் மார்க்சிஸ்ட் மாநாடு

Added : அக் 11, 2021
Share
Advertisement
விருதுநகர் : மார்க்சிஸ்ட் 23 வது நகர் மாநாடு பாண்டியன் நகரில் நடந்தது. கிளை நிர்வாகிகள் ஆனந்தஜோதி, விஜயபாண்டி, ஜெயா தலைமை வகித்தனர். நகர்குழு தலைமைகுழு உறுப்பினர் தேனிவசந்தன் கொடி ஏற்றினார். நகர்குழு உறுப்பினர் ஜெயக்குமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். நகர் குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவா துவக்கி வைத்தார். நகர செயலாளர்

விருதுநகர் : மார்க்சிஸ்ட் 23 வது நகர் மாநாடு பாண்டியன் நகரில் நடந்தது. கிளை நிர்வாகிகள் ஆனந்தஜோதி, விஜயபாண்டி, ஜெயா தலைமை வகித்தனர். நகர்குழு தலைமைகுழு உறுப்பினர் தேனிவசந்தன் கொடி ஏற்றினார்.

நகர்குழு உறுப்பினர் ஜெயக்குமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். நகர் குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவா துவக்கி வைத்தார். நகர செயலாளர் முருகன் அறிக்கை சமர்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமி பேசினார். 9 பேர் கொண்ட நகர் குழு தேர்வு செய்யப்பட்டு செயலாளராக முருகன் தேர்வு செய்யப்பட்டார். மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் நிறைவுரை வழங்கினார்.மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் ஆலமரம், விருதை விழுதுகள் அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டது. வரவேற்புகுழு செயலாளர் புஷ்பராஜ் நன்றி கூறினார். விருதுநகர் எல்லைகளை விரிவுபடுத்தி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். புதிய பஸ்ஸ்டாண்டை செயல்படுத்த வேண்டும். நகர் முழுவதும் மழை நீர் வடிகால்களை துார்வார வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தியாகி நினைவு இல்லத்தில் இருந்து ஊர்வலமும் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X